பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 21 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : திருமலை ரகுநாத சேதுபதி மன்னர். 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் திருக்கோயில் ஆதி னகர்த்தர் இராமனாத பண்டாரம். 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1595 பிர மாதீசு ஆண்டு தை மீ"(கி.பி.1673) 4. செப்பேட்டின் பொருள் : இராமேசுவரம் திருக்கோயில் ஆவணி திருவிழா நிலக்கொடை இந்தச் செப்பேட்டை வழங்கிய திருமலை ரகுநாத சேதுபதி மன்னரது விருதாவளியாக இந்தச் செப்பேட்டில் ஐம்பத்து மூன்று விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும், 'சத்துரு வாதிகள் முண்டன்' என்ற ஒரே ஒரு புதிய விருதைத், தவிர, மற்றவை அனைத்தும் இந்த மன்னரது முந்தைய செப் பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவைதான், இராமேசுவரம், இராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் பூசை நைவேத்தியத்திற்கும், ஆவணித் திருவிழா உற்சவத்திற்கும், புளியங்குடி, கருமல், குமாரக்குறிச்சி ஆகிய மூன்று ஊர்களை தானபூர்வமாகக் கட்டளையிட்டுள்ளதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த கிராமங்களும் “அவைகளின் உட்கிடையேந்தல்களும், அவைகளின் பரிநான்கு எல்லைக்குள்பட்ட, குட்டம், குளம், நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், பளவரி, சொர்ணாதாயம், செம்புவரி, களஞ்சியவரி சகலமும்' (வரி 25) என செப்பேடு விளக்கம் தந்துள்ளது. இந்த மூன்று ஊர்களும் இன்றைய இராமநாதபுரம் மாவட்டம்