பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 2.93 சுந்தரபாண்டின் பட்டினத்தில் அக்கிரகாரம், மடம், ஏகாம்பரநாத சுவாமி பூஜை ஆகியவைகளுக்கு எட்டு கிராமங் கள் தானம் வழங்கப்பட்ட செய்தியை இந்தச் செப்பேடு கொண் டுள்ளது. சுந்தரபாண்டியன் பட்டினம் கொந்தலன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான், சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் என்பன அவை. இந்த கிராமங்களுக்கான பெருநான்கு எல்கைகள் தெளிவாகக் குறிப் பிடப்பட்டு இருப்பதால் இவைகளிலிருந்து சில புதிய தகவல் களைப் பெறுவதற்கு எதுவாக உள்ளது. சுந்தரபாண்டியன் பட்டினம் சேது நாட்டின் வடக்குப் பகுதியில் கடற்கரையில் அமைந்த ஊராகும். பிற்காலப் பாண்டி யர்களில் சிறந்து விளங்கிய மாறவர்மன் சுந்தரபாண்டியன் அல் லது ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய பேரரசர் ஒருவரின் பெயரால் இந்த ஊர் எழுந்துள்ளது. இன்றைய இராமநாத புரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊரில் இன்று அக்கிரகாரம் மடம், கோயில் என எதுவும் இல்லை. வருவாய்த்துறை பதிவுகளில் இந்த ஊர் சோனகன் பேட்டையைச் சார்ந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பன்னி ரெண்டாம் நூற்றாண்டில் இந்த ஊருக்கு அண்மையில் இஸ் லாமியரது அஞ்சுவன்னம் ஒன்று இருந்ததை தீர்த்தாண்ட தானக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.* இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த ஊர் முத்துக் குளித்தலிலும் முத்து வணிகத்திலும் சிறந்திருந்த தாக பதினேழாம் நூற்றாண்டு ஆவணங்கள் கூறுகின்றன. இந்த வட்டாரத்தில் திருவேகம்பத்து என்ற ஊரில் உள்ள இறைவனது பெயர் ஏகாம்பர நாதர் என்பதை கி.பி. 1667 ஐச் சார்ந்த செப் பேடு ஒன்றிலிருந்து தெரிவதால் ஏகாம்பர நாதர் சுவாமி பூஜை என குறிப்பிட்டிருப்பது திருவேகம்பத்து திருக்கோயில் இறைவனைப் பற்றியதாக இருக்கலாம். மற்றும் இந்தச் செப்பேட்டின் வரி பதினேழில் பனஞ்சாயல் பள்ளித் தம்மம் என்ற சொல் காணப்படுவதில் இருந்து பனஞ் சாயல் கிராமத்தில் சமனப்பள்ளி யொன்று இருந்து வந்ததும் 1. தீர்த்தாண்டதானம் கல்வெட்டு. A. R. 598/1925. செப்பேட்டு தொடர். எண். 89.