பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 எஸ். எம். கமால் தெரிய வருகிறது. இந்த ஊரின் மேற்கே விரிசிலையாற்றின் வடக்குக் கரையில் ஜீனேந்திரமங்கலம் என்ற அனுமந்தக்குடி யில் இன்றும் சமணர்கள் வாழ்ந்து வருவதும் அவர்களது திருக் கோயில் ஒன்று மள வநாதர் பெயரில் அமைந்திருப்பதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. மேலும் இந்த வட்டாரத்தில் சமண சமயம் பரவியிருந்தது என்பதற்குச் சான்றாக மயிலுாாணி, நாக மங்கலம், நாகணி, நாகாடி, சாத்தனுார், சாத்தணி, சாத்தமங் கலம், சாத்தன் பள்ளி, சாத்தரசன் கோட்டை என்ற சிற்றுார்களும் இருந்து வருகின்றன . பதினேழாம் நூற்றாண்டில் சேதுபதி சீமையில் கடல் நீரிலிருந்து உப்பு விளைவிக்கப்பட்ட செய்தி வரி எண். 16ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அண்மைக்காலம் வரை இந்த ஊருக்கு அருகிலுள்ள வட்டாணத்தில் பெருமளவில் உப்பளங்கள் இருந் ததை அரசு ஆவணங்க ளில் காண முடிகிறது. இந்தச் செப் பேட்டில் பொறிக்கப்பட்டுள்ள கிடங்கு, தம்மம், திட்டு, திடல், புரவு, பொருத்து, குளக்கால் ஆகியவை இந்த வட்டார வழக் குகள் ஆகும். கிடங்கு என்பது ஆடுமாடுகள் அடைக்கப்படும் பட்டி. தம்மம் - தருமம் - பொதுவாக ஊரணி க ள்.