பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 14. அறிவுக்கு சகாதேவன் 15. ஆனைக்கு தெய்வேந்திரன் 16. மெச்சிய சூரன் 17. பரதேசிகாவலன் 18. இந்து குலசறுவகெருடன் இந்த பதினெட்டு விருதுகளும் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள சேதுபதி மன்னர் செப்பேடுகளில் காணப்படாதவையாகும். இவைகளில் முதல் பதினோரு விருதுகள் இந்த மன்னரது சிறந்த வீரத்தைக் குறிப்பிட வரையப்பட்டவை. ஏனைய ஏழு விருதுகள் மன்னரது கொடை, பொறுமை, கல்வி, அரசியல், திரம், சமயப்பற்று ஆகிய பண்புகளுக்கு சான்றாக விளங்குபவை. பரதேசி காவலன் என்ற தொடரில் உள்ள பரதேசி' என்ற சொல் சைவசமயத்துறவியைக் குறிப்பிடுவதாகும். திருமலை ரகுநாத சேதுபதி மன்னரது (கி.பி 1634-78) திருப்பெருந் துறைக் கோயில் செப்பேடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள "பரதேசி முத்திரை பரதேசி கட்டளை என்ற சொற்றொடர்களை (செப்பேடு எண்கள் 16, 17, 19) இங்கு நினைவு கொள்ளுதல் பொருத்தமாகும். மற்றும், ஒட்டியர் தளவிபாடன், ஒட்டிய மோகந்தவிள்த்தான் என்ற இரு விருதுகளும் ஒரிய நாட்டை தமதாக்கி வைத்துஇருந்த விஜயநகரப்பேரரசர்களுக்கு உரியவை. என்றாலும், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள 'மகாமண்டலே சுவரன், கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பாண்டிய மண்டல தாபனாச்சாரியன், துலுக்கர் தளவிபாடன், துலுக்க மோகந்தவிள்த்தான்' ஆகிய விஜயநகர பேரரசர் விருதாவளிகளுடன், இந்த இரு விருதாவளிகளும், மதுரை நாயக்க மன்னர் தளவாயாக, சேதுபதி மன்னர் பணியாற்றிய காரணத்தால், இந்த சேதுபதி மன்னரது விருதாவளிப்பட்டியலில் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. தென்னாலை நாட்டு எளுவாபுரி விசுவேசுரர் அகிலாண்டீ சுவரி அம்மன் திருக்கோயிலுக்கு சேதுபதி மன்னர் மூன்று கிராமங்களைத் தானம் வழங்கிய செய்தியை இந்தச் செப்பேடு கொண்டுள்ளது. அந்தக் கிராமங்கள் காளையார் கோவில் சீமை தென்னாலை நாட்டில் உள்ள புதுக்கோட்டை, கள்ளிக்குடி, இடையன் வயல், என்பவையாகும். இந்த ஊர்களுக்கு நிகுதி செய்யப்பட்டுள்ள பெருநான்கெல்கைகளில் இருந்து இந்த