பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 3.19 - வீடணனின் சரணாகதியும் இங்கு நிகழ்ந்ததாக ஐதிகம். திரு மங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பெருமையும் இங்குள்ள தர்ப்பாசனமழகியாருக்கு உண்டு. இந்தத் திருக் கோயிலில் திருபுவனச்சக்ரவர்த்தி மாறவர்மன் சுந்தரபாண்டியன், கம்பண்ண உடையார், சுந்தரத் தோளுடைய மாவலி வானா தரையன் ஆகியோரது கல்வெட்டுக்கள் உள்ளன. ஆனால் இப் பொழுதைய கோயில் அமைப்பு திருமலை ரெகுநாத சேதுபதி மன்னரால் செய்யப்பட்டதை தளசிங்கமாலை சொல்லுகிறது. சேதுபதி மன்னர்கள் பொதுவாக சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். அதனால்தான் சிவாபூஜா துரந்தரன்' என்ற விருது அவர்களுக்கு ஏற்பட்டது இராமேசுவரம், திரு உத்தரகோசமங்கை போன்ற திருக்கோயில்களுக்கும், திருப் பெருந்துறை திருவாவடுதுறை திருமடங்களுக்கும் பொன்னும் பொருளும், ஊரும் தேரும் வழங்கி வந்தனர். ஆனால் அவர் களில் மிகச்சிறப்பான வரலாறு படைத்த திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் (கி. பி. 1640 - 1678) சைவசமயப் பற்றுடன் வாழ்ந்ததுடன் இந்து சமயத்தின் இன்னெரு பிரிவான வைண வத்திற்கும் வாழ்வளிக்கும் பணிகளை மேற்கொண்டார். தமது சேதுநகரான இராமநாதபுரம் கோட்டைக்குள் உள்ள சிவால யத்தை ஒட்டி கோதண்டராம சுவாமி ஆலயத்தை அமைத்த துடன் திருப்புல்லாணி திருக்கோயிலைத் திருப்பணி செய்து, திருச்சுற்று, விண்ணகரம், திருவோலக்க மண்டபங்களையும் நிர்மாணித்து தேர்த்திருவிழாவையும் தொடக்கிவைத்தார். இந்த விழா இன்றளவும் ஆண்டுதோறும் பங்குனித் திங்களில் பிரம்மோத்ஸ்வமாக நடைபெற்று வருகிறது. பாண்டியர்களில் மிகச்சிறந்த மூன்றாம் ராசசிம்ம பாண்டியனைப் போன்று, பரமவைஷ்ணவனாக' வாழ்ந்து, இறுதியில், திருப்புல்லாணி யில் பூரீ இராமபிரானது தேர்த்திருவிழாவைக் கண்டு கழித்தவாறே, மரணமடைந்தார் . அந்த மன்னரையடுத்து, பட்டமேறிய ரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி இந்தப்பட்டயத்தின் வாயிலாக சமய பேதமில்லாத வகையில் திருப்புல்லாணித் திருக்கோயிலுக்கு 1. செந்தமிழ்-மதுரை தமிழ்ச்சங்க இதழ் - (தொகுதி 6) பக்கம் 44.