பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32O எஸ். எம். கமால் இராமானுஜப்பேரி உள்வாய், பிறவாய் நிலங்கள், காவல்பற்று முப்பனை முருகக்கடிபற்று மனையனேந்தல், கோரைக்குட்டம், காவேரியேந்தல், கோவிந்தனேந்தல், காரையடிமுறிவு, வெள்ளாபற்று, குத்தக்கோட்டை, உத்தரவை, மேதலை ஒடை சாம நத்தம் தினைக்குளம், தம்பிராட்டிதரவை, இருவரைவென்றான் பட்டணம், (இவையனைத்தும் திருப்புல்லாணி கிராமத்தைச் சுற்றியுள்ள சிற்றுார்கள்) நல்லாங்குடி, கடம்பங்குடி, இலங்கை வழி வந்த ஏந்தல், ஆதன் கொத்தன்குடி, மாறந்தை, திட்டகுளம் கொள்ளையனேந்தல், ஆமணக்குப் பத்தி ஏந்தல், பலவலசை எந்தல், விளாப்பத்தி ஏந்தல் (இவையனைத்தும் முதுகுளத்துார் வட்டத்தில் உள்ளவை.) பரரனுார், மறிச்சுக்கட்டி, பணிக்கனேந்தல், பன்னிக்குத்தி ஏந்தல், (இவை பரமக்குடி வட்டத்தில் உள்ளவை) ஆகியவை யுடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள சவரான்மங்கலம், ஆயன் பற்று ஆகிய கிராமங்களை தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது இராமானுஜப் பேரேரி என்பதுதான் இராமானுஜப்பேரி, என்றாயிற்று, நெல்லை மாவட்ட விசுவநாதப் பேரேரி, குலசேகரப் பேரேரி போன்று இராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி செல்லும் நெடுஞ்சாலையில் ஐந்துகல் தொலைவில் உள்ளது. இந்தஏரி வைணவசம்பிரதாயத் தில் மிகச்சிறப்பாக உடையவராகப் போற்றப்படும் பூரீஇராமா னுஜர் பெயரில் இந்த ஏரியை அமைத்த மன்னர் யார் என அறியத்தக்கதாக இல்லை. இப்பொழுது விவசாயத்திற்கு பயனற்ற ஆயிரத்து இருநூறு ஏக்கர் பரப்பில் களர் நிலமாக இந்த ஏரி காட்சியளித்துக் கொண்டு இருக்கிறது. இவைகளில் இருவரைவென்றான் பட்டணம், இலங்கை வழி வந்த ஏந்தல் ஆகிய ஊர்கள் இன்று வழக்கில் இல்லை. இந்த ஊர்களின் பிரிவு பற்று என வழங்கப்பட்டதும், இந்த ஊர் எல்லைகளுக்கு இடப்பட்ட கல், திருவாழிக்கல் என வழங்கப்பட்டதையும் இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. மேலும், இத்த ஊர்களில் இருந்து பள்வரி, பலவரி, திருகைவரி, களவரி, இடைவரி, மனைவரி, கூரைவரி, பாசிவரி, கொல்லன் தச்சன் வரி, ஈழம்புஞ்சைவரி, தட்டுவரி, நன்மாட்டுவரி, பனங்கடமை வரி, கத்திப்பெட்டி வரி, தம்பட்டவரி, சொத்துக்கணக்குவரி,