பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 36 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துவிஜயரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் அத்தியூத்து கிராம அந்தணர்கள் 3. செப்பேட்டின் காலம் ; 1635 விஜய வருடம் (கி.பி.1713) 4. செப்பேட்டின் பொருள் : அத்தியூத்து கிராமம் தானம் இந்தச்செப்பேட்டை வழங்கிய இராமநாதபுரம் முத்து விஜய ரெகுநாத சேதுபதியின் விருதாவளியாக ஐம்பத்து நான்கு சிறப்புப் பெயர்கள் இந்தச் செப்பேட்டில் காணப்படுகின்றன. இவையனைத்தும் இந்த மன்னருக்கு முன்னர் இராமநாதபுரம் அரசுகட்டிலில் அமர்ந்திருந்த சேதுபதிகளது செப்பேடுகளில் காணப்பட்டவையாகும். இந்த மன்னர் சிறந்த சிவபக்தராக விளங்கியவர். குறிப் பITக இராமேசுவரம் இராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மனிடம் இடையறாத பக்தி பூண்டு ஒழுகி வந்தவர். பயன வசதி இல்லாத அந்தக் காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து இராமேசுவரத்திற்கு நாள்தோறும் குதிரையில் சென்று திருக் கோயில் திருப்பணிகளைக் கண்காணித்து வந்தார். ஆதலால் கோயில் பணிகளை மேற்கொண்டு இருந்த அந்தணர்களிடமும் அவர் அனுதாபம் கொண்டிருந்தார் என்பதனை இந்தச் செப்பேடு புலப்படுத்துகிறது. அத்தியூத்து என்ற கிராமத்தைப் பதினான்கு வைதிக பிராமணர்களுக்கு மனைதர்மமாக தானம் அளித்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தக் கிராமம் அன்றைய செவ் விருக்கை நாட்டில் அமைந்திருந்ததாகத் தெரியவருகிறது. தற்