பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== சேதுபதி மன்னர் செப்பேடுகள் 511 யார் அவர்களுக்குரிய இராஜதந்திர முறையில் திடீரென கி.பி. 1795ல் இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றி இந்த மன்னரை மீண்டும் திருச்சிராப்பள்ளி சிறையிலடைத்தனர். இதனைத் தொடர்ந்து மறவர் சீமையெங்கும் மக்கள் திரண்டு சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர். சிங்கன் செட்டி, புட்டுர் ஆகியோர்களது தலைமையில் ஆயுதம் தாங்கி கிளர்ச்சியில் ஈடு பட்டனர். நாற்பது நாட்கள் நீடித்த இந்த மக்கள் இயக்கத்தை ஒழுங்கான படை பயிற்சியும் ஆயுத வசதியும் கொண்ட பரங்கிப் படைகள் நசுக்கி அழித்ததுடன் சிறைபட்ட சேதுபதி மன்னர்தான் இந்தக்கிளர்ச்சிக்கு காரணமென கும்பினியார் முடிவு செய்து அவரை திருச்சியிலிருந்து சென்னை ஜெயின்ட் ஜார்ஜ்கோட்டை யில் சிறை வைத்தனர். தமது நாற்பத்தெட்டு ஆண்டுகால வாழ்வில் மொத்தம் இருபத்துமூன்று ஆண்டுகளைச் சிறையில் கழித்த இந்த சேதுபதி மன்னர் 23.1.1809ல் தியாகியானார். இவரது பன்னிரெண்டு வருட ஆட்சியில் பல அடிப்படைப் பணிகளை மேற்கொண்டார். நாணயச் செலவாணி, குடிமைப் பொருள்கள் வழங்குதல் பிறநாட்டு வாணிகம் டச்சுக்காரருடன் ராணுவ தொழில் நுட்ப உதவி போன்ற பல திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்தியதுடன் பல அறப்பணிகளுக்கும் ஆதாரமாக இருந்தார். சேதுபதி மன்னர்களில் மிகவும் அதிகமான அறக் கொடைகளை திருக்கோவில்களுக்கும் திருமடங்களுக்கும் தேவா லயத்திற்கும், தனியார்களுக்கும் வழங்கி உதவிய பெரும் உப காரி இந்த மன்னர் என்பதை வரலாறு விளம்புகிறது. 1. கமால் எஸ்.எம். D விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் (1987) o o