பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 70 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி முத்துப்பேட்டை கிராம சர்வேசு வரன் கோவில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1703 பிலவ ஆண்டு கார்த்திகை 5ந் தேதி (கி. பி. 1781) 4. செப்பேட்டின் பொருள் : மேலேகண்ட தேவாலயத்திற்கு முத்துப்பேட்டை. தெஞ்சியேந்தல் கிராமங்கள் சர்வமானியம். 2. செப்பேடு பெற்றவர் ! இந்தச் செப்பேட்டில் சேதுபதி மன்னரது அறுபத்திமூன்று சிறப்புப் பெயர்கள் மன்னரது விருதாவளியாகக் காணப்படு கின்றன. இவைகளில். 'தென்னவன் ஆட்டம் தவிழ்த்தான், 'ஏழைப்பங்காளன்' என்ற இரு சிறப்புப் பெயர்களைத் தவிர எனையவையனைத்தும் இந்த மன்னரதும் இவரது முந்தை யோரது செப்பேடுகளில் காணப்பட்டவை ஆகும். இராமநாதபுரம் வட்டம் முத்துப்பேட்டை கிராமத்தில் உள்ள சர்வேசுவரன் ஆலயத்திற்கு முத்துப்பேட்டை தெஞ்சி யேந்தல் (பரமக்குடி வட்டம்) கிராமங்களை சர்வமானியமாக வழங்குவதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. பதினேழா வது நூற்றாண்டின் இறுதியில் மறவர் சீமையில் கிறித்தவ மதம், மதுரை சேசு சபை, மூலமாக நுழைந்தது. இந்து ஆஸ்திக வாதிகள் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினர். அப்பொழுது ஆட்சியில் இருந்த ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னரை நெருக்கினார். இராமநாதபுரம் ஆட்சி பீடத்திற்கு போட்டியிட்ட