பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 37 (விளக்கம்) - 1. செப்பேடு வழங்கியவர் : முத்து விஜய ரெகுநாத சேதுபதி காத்த தேவர் 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் பூரீ இராமநாத சுவாமி திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1636 ஐெயவருஷம் சித்திரை மாதம் 1ந்தேதி (கி.பி. 17-16) 4. செப்பேட்டின் பொருள்: இராமேசுவரம் திருக்கோயில் சுக்கிரவாரக் கட்டளைக்கு மன்னார் முத்துச் சலாபத்தில் உரிமை இந்த மன்னரது விருதாவளிகளாக எழுபத்து இரண்டு சிறப்புப் பெயர்கள் இந்தச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளன. இவைகளில் பிக்கார் கண்டன், பரராஜ சற்ப கருடன் என்ற இரு விருதுகள் மட்டும் புதிய விருதுகளாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் இந்த மன்னரது இணையற்ற வீரத்தை சுட்டுவதாகும். இராமநாதபுரம் முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர், மன்னார் சலாபத்தில் தமக்குள்ள உரிமையில் இராமேசுவரம் திருக்கோயிலுக்கு முத்துச்சலாபம் மூலம் கிடைக்கும் ஊதியத்தை கோயில் சுக்கிர வாரக் கட்டளைக்கு பயன்படுத்த இந்தப் பட்டயம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது முன்னோர்களான திருமலை ரெகுநாத சேதுபதி கிழவன் ரெகுநாத சேதுபதி ஆகியவர்களைப் பின்பற்றி முத்துச் சலாப உரிமையை இந்த மன்னரும் இந்த திருக்கோயிலுக்கு