பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/829

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ சதுபதி மன்னர் செப்பேடுகள் 517 --- __ இராமநாதபுரத்திற்கு அண்மையிலுள்ள திருஉத்திரகோச மங்கை சைவப் பெருமக்களால் இறைவனது ஊராககொண்டா டப்பெறும் ஏற்றம் பெற்றுள்ளது. திருவாசகத்தின் சில பகுதி களை இங்கு மணிவாசகப் பெருமான் இறைவன்மீது பாடினார் என்பது வரலாறு. இங்குள்ள கோயிலின் ஸ்தானிகரான மங்க ளேஸ்வர குருக்களுக்கு கருக்காத்தி கிராமத்தை சர்வமானிய மாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. சேதுபதி மன்னர்களது வழிபாட்டுத் தலங்களில் இராமேசுவரத்துக்கு அடுத்ததாக கருதப்படும் இந்தக் கோயிலின் ஸ்தானிகர் அவரது கடமையிலும் ஒழுக்கத்திலும் சிறந்த உத்தமராக இருந்த கார ணத்தால் அவரது பணியும் வாழ்வும் சிறக்க மன்னர் இந்த நிலக்கொடையை வழங்கி ஊக்குவித்து உள்ளார். தானம் வழங்கப் பெற்றுள்ள கருக்காத்தி கிராமம் இராம நாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் வட்டம் திருஉத்திரகோச மங்கையிலிருந்து ஐந்துகல் தொலைவில் களரிக் கண்மாய்க்குக் கிழக்கே அமைந்து உள்ளது. இது தற்பொழுது பேச்சில்லா கிராமமாக உள்ளது. இதன் பெரு எல்லையாகக் குறிக்கப்பட் டுள்ள வேளானேரி, இன்று வேளானூர் என்று வழக்குப் பெற் றுள்ளது. சேதுபதி மன்னரது தானம் பெற்ற பிறகு இந்த ஊரின் பெயர் முத்துராமலிங்கபுரம் என்ற வழங்கப்பட்டதை செப்பேட்டின் வரி (38) புலப்படுத்துகிறது.