பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 எஸ் எம் கமால் உள்ளங்களுக்கும் இராமநாதபுரத்தில் சித்திபெற்ற தாயுமான அடிகள் விடுத்த அழைப்பு ஒருபுறம் இருக்க, இத்தகையோர் தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதற்கான செய்தி களும் உள்ளன. 4. சகுனத்திற்கு பரிகாரம் சூரிய, சந்திர, கிரகணங்கள், மனித இனத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியது என அன்றைய மக்களிடையே வலுவான நம்பிக்கை இருந்து வந்தது. அத்தகைய பொழுதினை சமுத்திர நீராடலிலும் இறை வழிபாட்டிலும் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவைகளினால் அவர்களது பிதுர்களும் புண்ணியம் பெறுவர் என்பது ஐதீகம். இத்தகைய கிரகண நாள் ஒன்றில் இராமநாதபுரம் அரண்மனையில் மன்னர் உணவு கொள்ளும்பொழுது விளக்கு அணைந்தது ஒரு கெட்ட சகுன மாகக் கருதப்பட்டது. அதற்கான ஆலோசனைகளை சாஸ்திர வல்லுனர்களிடமிருந்து பெற்று பரிகாரம், காணப்பட்ட செய்தி செப்பேடு ஒன்றில் பதிவாகியுள்ளது. திருஉத்திரகோசமங்கை கோயில் குருக்கள் ஒருவர் 'திருவிளக்கு, திருவேறின, பாவ நிவாரணமாக அரசரிடமிருந்து கதையனேந்தல் என்ற ஊரினை தானமாகப் பெற்றார். (செ.எண். 54) சில சேதுபதி மன்னர்கள் தானம் வழங்குவதற்கு ஏற்ற நாட்களாக, சூரிய, சந்திரகிரகண நாட்களைத் தேர்வு செய்து, சேதுக்கரையிலும், தனுஷ்கோடி கரையிலும் இருந்து இந்ததானங்களை அளித்துள்ளனர். என் பதும் குறிப்பிடத்தக்கது. = மறவர் சீமை விழாக்கள் தமிழக விழாக்களான தமிழ்ப்புத்தாண்டு, ஆடிப்பெருக்கு தைப்பொங்கல் இவையனைத்தையும் அல்லது இவைகளில் ஒன்றி ரண்டை ஆண்டுதோறும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள் கொண்டாடி வந்தனர். இவைகளை மறவர் சீமையிலும் கொண்டாடியிருக்க வேண்டும். இந்த பட்டயத் தொகுப்பிலிருந்து சேது நாட்டில் வேறு இருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப் பட்டதை அறியமுடிகின்றது. அவை மகர் நோன்பு மகா நவமி ஆகியவை. மதுரை மன்னர் திருமலை நாயக்கரது வேண்டுகோளை ஏற்று மறவர் படையுடன் மதுரை சென்ற திருமலை ரெகுநாத