பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/967

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 657 --- கொடை பற்றி ஆணை பிறப்பிக்கும் பொழுது அந்தப் புதிய ஆணையும் தொடர்புடைய அந்தச் செப்பேட்டின் தொடர்ச்சியாக வரையப்பட்டது, கி.பி. 1668 ல் வழங்கப்பட்ட நிலக்கொடை இராமநாதசுவாமி அறக்கட்டளைக்குப் போதுமானதாக இல்லை என்பதை அறிந்தவுடன் கி. பி. 1673ல் மீண்டும் அதே அறக் கொடைக்கு உரசூர் கிராமம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கட்டளையை திறம்பட நடத்திவைக்க அந்த ஊர்மணியம் ஐயனையும் இராமேசுவரம் ஆரிய மகாஜனங்களில் தெவ்வங்கள் பெருமாள் என்பவரையும் பொறுப்பாக்கி உத்தரவிடப்பட்டுள் ளது. இந்தப் புதிய உத்தரவும் இந்தச் செப்பேட்டின் மூன்றாவது, நான்காவது பக்கங்களில் தொடர்ச்சியாக வரையப்பட்டுள்ளது. இன்னொரு புதிய செய்தி. பெருமாள் சேர்வைக்காரரது இந்த நிலக்கொடை ஆணையைப் சேதுபதிமன்னர் பார்வை யிட்டு அங்கீகரித்ததற்கு அடையாளமாக செப்பேட்டில் இரண்டு இடங்களில் முதல் செப்பேட்டின் இரண்டாவது பக்கத்தில் 33வது வரியிலும் இரண்டாவதுசெப்பேட்டின் 72வதுவரியிலும் 'பூனரீ.சுப்பிர மணிய பூரீ திருமலய ஹிரண்ய கற்பயாசி சேதுபதி ரெகுநாதன்: ' என கைச்சாத்திட்டு வரையப்பட்டுள்ளது. பொதுவாக இந்தச் செப்பேடு தமிழும் கிரந்தமும், தெலுங் கும் கலந்த மணிப்பிரவாள தொடராக வரையப்பட்டுள்ளது. இதைச் செப்பேட்டில் காணப்படும், ஊடுபிலாறு (வரி.26) குளக் கால் (வரி. 26) குடியிருப்பு (வரி. 34) பொருத்துக்கரை (வரி.35) மடைக்கண் (வரி. 36) ஊரது புரவு (வரி. 38) என்பன இந்த வட்டார வழக்குகள்.