பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 எஸ். எம். கமால் கோட்டை, திருப்பாற்கோட்டையாகவும், காரம்பல் காரேந்த லாகவும் நயமொழி மங்கலம் நிலமழகிய மங்கலமாகவும் எக்கை குடி எக்ககுடியாகவும், மஞ்சியூர் மஞ்சூர் என்றும் மாற்றம் பெற்றதை இந்தச் செப்பேடுகளில் காணமுடிகின்றது. மற்றும் இன்றையப் பெயர்களான இளமனூர், வேளானூர், மாதவனுார் இளமனேரி, வேளானேரி, மாதவனேரி என்ற முன்னாள் பெயர் வழக்குகளின் திரிபுகள் என்பதை செப்பேட்டு வாசகங்கள் தெரிவிக்கின்றன. சேது யாத்திரை இராமேசுவரத்திற்கு நமது நாட்டின் பல பகுதிகளிலிருந் தும் இன்றுபோல் முன்னரும் மக்கள் சேதுயாத்திரையாக வந்துசெல்லும் வழக்கம் இருந்தது. போக்குவரத்து, உணவு, உறையுள், வசதிகளில்லாத அந்தக்காலத்தில் சேது யாத்திரை மேற்கொள்வது கடினமான செயலாகும். இந்த யாத்திரை இராமேஸ்வரம் தீவில் பாம்பன் அருகி லுள்ள வைரவ தீர்த்தத்தில் தொடங்கி தனுஷ்கோடி அனுப்பு தீர்த்தம் மற்றும் இராமேஸ்வரம் தீர்த்தங்களில் புனித நீராடி இராமநாதசுவாமி தரிசனம் பெறுவதுடன் முடிகிறது. இந்த யாத்திரையில் நீராடும் தலங்களாக சேதுக்கரை. திருப்புல்லாணி சக்கர தீர்த்தம், தேவிபட்டினம், நவபாஷாணம் ஆகியவைகளை யும் சேர்த்துக்கொள்வது உண்டு. பின்னர், இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனையில் சேதுமன்னர்களைத் தரி சிப்பதுடன் அந்தப் பயணம் முடிவுபெறும். சேதுபதி தரிசனமே இராமலிங்க தரிசனம் எனச் செப்பலாமே ' என்பது ஒரு புலவரது வாக்கு. இந்த சேது யாத்திரையை கி.பி. 1524 ல் விஜயநகரப் பேரரசர் தமது பட்டத்துராணிகளுடன் மேற்கொண்டார் என்பது வரலாறு. சென்ற நூற்றாண்டில் கூட திருவாங்கூர், கொச்சி, தார், சமஸ்தானாதிபதிகள் இந்தச் சேது யாத்திரையை மேற் கொண்டு சேதுபதி தரிசனத்துடன் முடித்த செய்தி இராமநாத புரம் மேன்யுவலில் வரையப்பட்டுள்ளது" . இந்த யாத்திரையை 23. Raja Ram Rao. T. Manual of Ramnad Samasthanam (1891) pp. 208-209