பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சேதுபதி மன்னர் வரலாறு

வண்ண வயல்

2. கமுதி மன்னா ரெட்டியார்

வடகரை, தென்கரை கிராமங்கள்

VI ராணி மங்களேஸ்வரி நாச்சியார்

1. கவிக்குஞ்சர பாரதியார்

பெருங்கரை (அழகர் குறவஞ்சி பாடியதற்காக)

2. சங்குப்புலவர்

ஊக்குடி - சகம் 1960 (கி.பி.1767) சர்வசித்து மாசி 16 3.

3.முத்தையா புலவர்

ஊரணிக் கோட்டை - சகம்
VI தனியார்கள்

சேதுபதி மன்னர்கள் வள்ளல் தன்மைக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பவை அவர்கள் தனியார்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான அறக்கொடைகள் ஆகும் நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்கள். செப்பேடுகளின் படி இத்தகைய அறக்கொடைகளைப் பெற்றவர்கள் 210 பேர் எனத் தெரியவருகிறது. இவர்கள் தானமாக பெற்ற ஊர்கள் 219 ஆகும். இத்தனை ஊர்களை இந்த மன்னர்கள் தானமாக வழங்கியிருப்பதன் நோக்கம் என்ன என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. சேதுபதி மன்னர்களது பெருமையையும் ஆடம்பர வாழ்க்கையினையும் பறை சாற்றுவதற்காக வழங்கப்பட்டவையா இந்தக் அறக்கொடைகள்?

கல்வி வசதியும் மருத்துவ வசதியும் இல்லாத கி.பி.17,18 ஆம் நூற்றாண்டுகளில் சேது நாட்டு மக்களது இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த மன்னர்கள் பெரிதும் முயன்று வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது. எழுத்தாணி கொண்டு ஏட்டில் எழுதிப்படித்த அந்தக்காலத்தில் குடிமக்கள் சமயச் சிந்தனையையும் இலக்கிய ஈடுபாட்டினையும் பெறுவதற்காக இந்த மன்னர்கள் பல அவதானிகளையும், பண்டிதர்களையும் வித்வத் மகாஜனங்களையும். நாட்டுத் வைத்தியர்களையும் சேது நாட்டுக்கு வரவழைத்து நிலையாகத் தங்கித் தங்களது பணியினைத் தொடர்வதற்காகத்தான் இத்தனை அறக் கொடைகள். இந்து சமயம் சேது நாட்டின் அப்பொழுதைய பொதுச் சமயமாகக் கருதப்பட்டாலும் அந்தச் சமயங்களின் அடிப்படைக் கருத்துக்