பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை முன்னொரு காலத்தில் தமிழகம் சேர சோழ பாண்டிய அரசமரபினரால் ஆளப்பட்டது. சேரர் ஆண்ட தென் பகுதியே தற்பொழுது கேரளா என்று அழைக்கப்படு கின்றது (சேர > கேர > கேரளா). தமிழ்மொழியே அந் நிலத்து வாழ் மக்கள் மொழியாகவும், அரசவை மொழி யாகவும், அரசு மொழியாகவும் இருந்து வந்தது. கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகே மலையாளம் வளர்ந்து தனிமொழியாகச் செயல்படத் தொடங்கி, அரசவையிலும் மற்ற இடங்களிலும் தமிழின் இடத்தைப் பெற்றது. கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டு வரை தமிழ்ப்புலவர் பெருமக்களே சேரநாட்டில் சிறந்து விளங் கினர். இவ் ஆய்வு நூல், சேரநாட்டுப் புலவர் மட்டுமின்றி, சேரநாடு, சேர அரசர் குறித்துத் தம் செய்யுட்களில் செப்பியுள்ள புலவர் குறித்தும் எழுந்துள்ளது. சங்க இலக்கியம் என்ற தொகுப்பின்கீழ்த் தமிழின் தொன்மைக்கால இலக்கியம் அடங்குகின்றது. அவற்றுள் பதிற்றுப்பத்து சேர அரசமரபு பற்றியும், சேரநாடு பற்றி யும் இயம்பும் இலக்கியமாய்த் திகழ்கின்றது. இவ்ஆய்வின் முதல் இயல், மூன்று பிரிவுகளைக் கொண்டதாகும். முதற் பிரிவு, பதிற்றுப்பத்து குறிப்பிடும் அரசியல், சமுதாயம் மற்றும் அரசர், மக்கள் குறித்து விரிவாக எடுத்துரைக் கின்றது. இரண்டாம் பிரிவு, எட்டுத் தொகையுள் ஒன்றான பதிற்றுப்பத்து நீங்கலாக ஏனைய நூல்கள், சேரர், சேரநாடு குறித்துக் கூறும் செய்திகளைப் பகுத்தும் தொகுத்தும் தருகின்றது. மூன்றாம் பிரிவு, சேரர் குறித்துப் பத்துப்பாட்டு நல்கும் செய்திகளைத் திரட்டித் தருகின்றது. இரண்டாம் இயல், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது குறித்த ஆய்வு பற்றியதாகும். ஒரு சேரமன்னனின் போர்த்திறனை விளக்கும் இச்செய்யுள் இலக்கியம் மிக்க பயனுடைத்து. மூன்றாம் இயல், இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை