பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பகுதிகளையும் துளுநாட்டு மன்னனாகிய நன்னன் கைப் பற்றிக்கொள்ள, அவனை வெல்லும் பொருட்டு நார்முடிச் சேரல் தொடங்கிய போர் நெடுநாள் நிலைச்செருவாக நடந்தது. இறுதியில் நார்முடிச் சேரல் வெற்றி கொண்டான். பூழி நாட்டைத் திரும்பவும் நன்னனிடமிருந்து மீட்ட நார்முடிச்சேரல் துளுநாட்டினுட் புகுந்து போர் செய்து, பின்னர் நன்னன் நாட்டின் கடற்கரைப் பக்க மாகப் புகுந்து, அவன் நாட்டின் நல்ல ஊர்களாகிய வியலூர், கொடுகூர், நறவு முதலிய ஊர்களைக் கைப் பற்றினான். கடம்பின் பெருவாயில், வாகைப் பெருந்துறை என்னும் இடங்களிலும் போர் நிகழ்ந்தது. இறுதியில் நன்னன் தோல்வியுற்றதோடு போர்க்களத்திலும் இறந்து போனான். இச்செய்தி, எழுமுடி கெழீஇய திருளுெமர் அகலத்துப் பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன் சுடர்வி வாகைக் கடிமுதல் தடிந்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல் -நான்காம் பத்து; 10: 13-16. என்ற பதிற்றுப்பத்துப் பகுதியாலும், ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பில் பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇப் உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை நிலைச் செருவின் ஆற்றலை யறுத்தவன் பொன்படு வாகை முழுமுதல் தடிந்து குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச் செருப்பல செய்து செங்களம் வேட்டு என்ற நான்காம் பத்தின் பதிகத்தாலும் தெரியவருகின்றது. மேலும் இச்செய்தி கல்லாடர் இயற்றிய அகப்பாடல், ஒன்றாலும் வலியுறுகின்றது. இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய