பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பழையன் பெண்டிரின் கூந்தலை அரிந்து திரித்த கயிற்றினைக் குஞ்சர ஒழுகை பூட்டிப் பழையனின் காவல் மரமான வேம்பினை ஏற்றிச் சென்றான் என்ற அரிய செய்தியைப் பதிகம் குறிப்பிடுகின்றது. சோழன் கரிகாலன் இறந்த பின்னர் அவன் மகனான கிள்ளி வளவன் முடிசூடிக் கொண்டபோது, சோழர் குடியில் வந்த தாயாதிகள் ஒன்பதின்மர் தங்கட்கும் ஆட்சியுரிமை கோரி உள்நாட்டுக் கலகத்தை விளை வித்தனர். அதுபோது செங்குட்டுவன் தன் மைத்துனனான கிள்ளிவளவன் சார்பில் படையெடுத்துச் சென்று சோழர் ஒன்பதின்மரையும் ஒருங்கே வென்றான். இவ்வெற்றியினை, வெந்திறல், ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயில்புறத் திறுத்து நிலைச் செருவின் ஆற்றலை யறுத்து என்று ஐந்தாம் பத்தின் பதிகமும், மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளங்ா உழிக்கும் மாண்பின ராதலின் ஒன்பது குடையும் ஒருபக லழித்தவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய் -சிலம்பு; நீர்ப்படை, 118.123. ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரிவாயில் நிலைபெற வென்று -சிலம்பு; நடுகல், 116.117. என்று சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. கங்கைக் கரையில் செங் ட்டுவன் இரு போர்களைச் செய்துள்ளான். தன் தாயைக் கங்கை நீராட்டக் கொண்டு சென்றபோது முதற் போர் நிகழ்ந்தது என்றும் பிறிதொரு போர் கண்ணகியைக் கடவுண் மங்கலம்