பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 manufacture and indulging in extensive trade with enough icisure and inclination to practice fine arts like Poetry und Music. The religious attachement of those people were not marred by bigotry but qualified by an uninihibited tolerance... The civilization of the Tamils of the Sangam age had reached a stage which prevent its being completely dominated or effected by any foreign culture, including that of the Aryans. -Introduction சேரமன்னரின் அரச நீதி கோபம், காமம் மிகுந்த கண்ணோட்டம், அச்சம், பொய்ச்சொல், அன்பு மிகுந்திருத்தல், கடுமையாகத் தண்டித்தல் முதலான செயல்கள் அறமாகிய சக்கரம் சுழலத் தடையாக நிற்கும் வழிக்கற்களாகும் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது: சினனே காமங் கழிகண் ணோட்டம் அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத் தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும். -மூன்றாம் பத்து; 2 : 1.4. சேரன் நாட்டை நல்ல முறையில் ஆளுகின்ற காரணத் தினால் நல்ல திருவுடைத்தாக அவன் நாடு பொலிகின்றது; விளைவு தப்பாமல் வாய்க்கின்றது; மக்கள் துன்பமில்லாத வாழ்வு வாழ்கின்றனர். . இவ்வாறு பாலைக் கெளதமனார் பல்யானைச் செல்கெழு குட்டுவனின் ஆட்சி மேம் பாட்டினை நயமுறக் கிளத்துகின்றார் (3; 1:30.31). சேர மன்னரின் பண்பு நலன்கள் நிலம், நீர், வளி, விசும்பு என்ற நான்கு பூதங்களை அளந்து காணல் அருமையாதல் போலச் சேரவேந்தரின் ஆற்றலினையும் அளந்து காணல் அரிது என்பர் குமட்டுர்க்