பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 அறிவுடையோரை யெண்ணினாலும், அஃது இல்லாத மடவோரை யெண்ணினாலும், பிறருக்கு நீ உவமமாக வாய்ப்பதன்றி, நினக்குப் பிறர் உவமமாகாத ஒப்பற்ற பெருமையுடைய வேந்தன் என்று மேலும் இம்மன்னன் அரிசில்கிழாரால் பாராட்டப்பட்டுள்ளான். உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும் பிறர்க்குநீ வாயி னல்லது நினக்குப் பிறருவம மாகா வொருபெரு வேந்தே. -எட்டாம் பத்து : 3:1-3அவனுடைய செல்வமும் வீரமும் கொடையும் மக்கள் ஆராய்ச்சியெல்லையைக் கடந்தன என்றும் பாராட்டு கின்றார் புலவர். நின், வளனு மாண்மையுங் கைவண் மையும் மாந்தர் அளவிறந் தன. -எட்டாம் பத்து : 3:11-13 . அருமறைப் பொருளை அறிவர் உரைப்பக் கேட்டு. அவர் உரைத்த விரதங்களை மேற்கொண்டு தவிரா தொழுகி, அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த நன் மக்கள் மனமகிழும்படி வேள்விகளைச் செய்து முடித்தவன் என்று மேலும் இவன் புகழப்படுகின்றான். கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப. -எட்டாம் பத்து ; 4:1-2, இவன் போர்க்களத்தில் உயிரைப் போற்றுவதில்லை என்றும், இரவலர் நடுவண் கொடை போற்றுவதில்லை யென்றும் பாராட்டப்படுகின்றான். உயிர்போற் றலையே செருவத் தானே கொடைபோற் றலையே யிரவலர் நடுவண். -எட்டாம் பத்து ; 9:1-2மேலும் இவன் பெரியோர்களைத் தமராகப் பேணிக் கொண்டு, ஆற்றலாற் சிறியராயினாரையும் புறக்கணியாது