பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

சேரன் செங்குட்டுவன்

பிரிந்திருந்தவரல்லர். அக்காலவியல்பு அங்ஙனமாதலின், சேரன் செங்குட்டுவன் தன்னைச் சார்ந்த அந்நிய மதத்தவரை அபிமானித்ததும் ஆதரித்ததும் வியப்புடையனவல்ல எனலாம். இவ்வாறே, பிற்காலத்துத் தமிழரசரும் மாதாந்தரங்களை அபிமானித்திருக்குஞ் செய்தி சாஸனங்களால் அறிந்தது. [1]

இனிச் செங்குட்டுவன் தன் வைதிகச் சார்புக்கேற்ப, பிராமணரைப் பெரிதும் ஆதரித்து, அவர்கள் கூறும் உறுதி மொழிப்படியே ஒழுகி வந்தவனென்பது, மாடலனென்ற மறையவனிடம் அவன் காட்டிப் போந்த கெளரவச் செய்கைகளாக முன்பறிந்தவற்றால் விளக்கமாகும். இவன் தமிழ்வேந்தனாயினும் க்ஷத்திரிய வருணத்தவனாதலால், அவ்வகுப்பினர்க்குரிய யாகாதிகளை அந்தணரைக் கொண்டு செய்து வந்ததும் [2] பிராமணரையும் அவர் தர்மங்களையும் பெரிதும் போற்றி வந்தமையும் [3]. அறியத்தக்கன.

  1. இராஜராஜசோழன் I. முதலியோர் சைவாபிமான மிக்கவர்களாயிலும், இவ்வாறே சைந,பௌத்த மதங்களை அபிமானித்து வந்தவர்கள் என்பது அவர்கள் சாஸனங்களால் அறியப்படுகின்றது. (கோபிநாத ராயரவர்களெழுதிய சோழ வமிச சரித்திரம். பக்-17)
  2. சிலப், 28: 175-194
  3. ஷ . 26: 247-250