பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சேரன் - செங்குட்டுவன்

தென்றே புலப்படுகின்றது. இக் கொள்கையை வலியுறுத்தும் மற்றொரு குறிப்புமுண்டு. அஃதாவது, வழக்கிலுள்ள ‘சேர சோழ பாண்டியர்’ என்னுந்தொடரில் சேரர் முற்படக் கூறப்படுதலேயாம். இங்ஙனங் கூறுவது, உலகவழக்கின் மட்டுமன்றிச் செய்யுள் வழக்கிலும் அடிப்பட்டதொன்றாகும். புறநானூறுதொகுத்த புலவர் மூவேந்தருட் சேரரைப்பற்றிய பாடல்களை முதலிலும், ஏனையிருவர் பாடல்களைப் பின்னரும் வைத்து முறைப்படுத்திருத்தலும், சிறுபாணாற்றுப் படையுள்ளும் இங்ஙனமே குட்டுவன் (சோன்), செழியன், செம்பியன் என்னுமுறை கூறப்படுத்தலும்[1] இங்கு ஆராயத்தக்கன. “போந்தை வேம்பே யாரென வரூஉ - மாபெருந் தானையர்”[2] என, இச்சேரர்மாலையினையே முதற்கண் ஓதுவாராயினர் தொல்காப்பியரும். மேற்காட்டியவற்றுள், சேர பாண்டிய சோழர் என்னும் முறைவைப்புக் காணப்படினும், சேரரை முன்னோரெல்லாம் முதற்கண்வைத்துக் கூறுவதில் ஒத்திருத்தல் குறிப்பிடற்பாலதாம்.

இனி, இச்சேரரது நாடு மூரும் புராதன வடநூல்களினும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஆதிகாவியமாகிய வான்மீக ராமாயணத்தே, சீதா பிராட்டியை வானரவீரர் தேடிவரும்படி, சுக்ரீவன் குறிப்பிட்ட இடங்களுள், கேரள நாடும், முரசீபத்தனமும் கூறப்படுகின்றன. இவற்றுள், முரசீபத்தன மென்பது மேல்கடற்கரையிலுள்ள முசிரி என்னும் பட்டினமாகக் கருதப்படுகின்றது. இது, முற்காலத்தே சுள்ளியென்னும் பேரியாறு கடலுடன் கலக்குமிடத்து விளங்கிய பெருந்-


  1. அடி - 49, 65, 82. தொல்காப்பியம். பொருளதி. புறத். 5.
  2. கிஷ்கிந்தாகாண்டம் 43- ம் ஸர்க்கம். 12-ம் சுலோகம்.