உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

சேரன்-செங்குட்டுவன்

எனவும், மாமூலனார் என்ற புலவர் —

“மறப்படைக் குதிரை மாறா மைந்திற்
றுறக்க மெய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ் சோல்
பெருஞ்சோறு
கொடுத்த ஞான்றை.”[1]

எனவும் கூறுவாராயினர். இனிச் சாஸனவழியே நோக்குமிடத்தும், இச்சேரவமிசத்தின் பழமை தெளியப்படும். இற்றைக்கு 2150-வருஷங்கட்கு முன் விளங்கியவனும் மௌரிய சக்கரவர்த்தியுமாகிய அசோகன் காலத்தே இவ்வமிசத்தவர் கேரளபுத்திரர் எனவழங்கப்பெற்றுத் தென்னாட்டில் பிரபலம் பெற்றிருந்த செய்தி அவன் சாஸனத்தால் நன்கறிந்தது. [2]இச்சக்கரவர்த்தியின் குடைக்கீழ் இப்பரதகண்டத்தின் பெரும்பாகம் அடங்கியிருந்த காலத்தும், தமிழ்நாடு தனியே சுதந்தரம் பெற்றிருந்ததெனின், சேரர் முதலிய பழைய தமிழரசரின் பெருமை இத்தகைத்தென்பது கூறவும் வேண்டுமோ ?

இனி, இவற்றை விடுத்துச் சங்கச்செய்யுள்களிற் கூறப்பட்ட சேரவரசரை நோக்குவோம். பதிற்றுப்பத்து, புறநானூறு முதலிய நூல்களிலே சேரவரசர் பலரைக் காணலாம். இவற்றுட் பதிற்றுப்பத்து முழுமையும் சோவமிசத்தவரைப் பற்றியதென்பது முன்னரே கூறப்பட்டது. இதுவரை காணப்படாத இதன் முதலும் இறுதியுமாகிய பகுதிகள் நீங்க, ஏனையெட்டுப் பத்துக்கள் மஹாமஹோபாத்தியாய:


  1. அகநானூறு. 233.
  2. V. A. Smith's Early History of India. p. 173.