பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை

53

இங்ஙனம் பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைத்திறங்களை யெல்லாங்கேட்ட செங்குட்டுவன், வருத்தமிக்கவனாய்ச் சாத் தனாரை நோக்கி—“புலவீர் ! தான் செங்கோலினின்று வழுவிய செய்தி எம்மையொத்த அரசர் செவிகளிற் சென்றெட்டுவதற்கு முன்பே பாண்டியன் உயிர் நீங்கியதானது, அவனது தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே நிமிரச் செய்து செங்கோலாக்கிவிட்டது. அரசராயுள்ளார்க்கு, நாட்டில் மழை காலத்திற்பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் தவறு செய்யுமாயின் அச்சம்; கொடுங்கோற்கஞ்சி மன்னுயிர்களைக் காத்தற்குரிய உயர்குடியிற்பிறத்தலிற் றுன்பமல்லது சுகமேயில்லை” என்று கூறிவிட்டுத் தன் தேவியை நோக்கி “நன்னுதால்! கணவனாகிய பாண்டியனுடன் தன்னுயிரை நீத்த அவன் தேவியும், சினத்துடன் நம் நாடு நோக்கி வந்த கண்ணகியுமாகிய இவ்விரு பெரும்பத்தினிகளுள்ளே யாவர் வியக்கத் தக்கவராவர்?” என்று உசாவ, அதற்கு வேண்மாள் ‘தன் கணவனது துன்பத்தைக் காணாது உயிர்நீத்த பாண்டியன் பெருந்தேவி விண்ணுலகத்தே பெருந்திருவுறக் கடவள். அதுநிற்க; நம் நாட்டை நோக்கி வந்த பத்தினியை நாம் வழிபடுதல் இன்றியமையாதது’ என்று கூறினான். அது கேட்ட அரசன், அவள் கூறியதை விரும்பியேற்றுத் தன் அமைச்சரை நோக்கவும், அவர்கள், நம் நாடு நோக்கி வந்த அப்பத்தினிக்கடவுட்குப் படிவஞ்சமைத்தற்குரிய சிலையைப் பொதியமலையினின்றேனும் இமயமலையினின்றேனும் எடுத்துவருதலே தக்கதாம். ஆயின், பொதியத்தினின்று கொணர்வதைக் காவிரியினும் இமயத்தினின்று கொணர்வதைக் கங்கையினும் நீராட்டித் தூய்மை செய்வித்தல் மிகப் பொருத்த-