பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 153



பெற்று அயிரையூர் வழியாக ஓடுகிறது. அயிரையூர் இப்போது அயிரூர் என்று வழங்குகிறது. அயிரை மலையும் இப்போது அயிதைமலை யெனக் கூறப் படுகிறது. இந்த அயிதைமலையே சங்க நூல்கள் குறிக்கும் அயிரை மலையாம் என்று திரு. கே.ஜி. சேஷையவவர்களும்[1] கருதுகின்றார்கள். அதை யாறு பம்பையோடு கலந்து பெருந்தேன் அருவி எனப்படுவதற்கு முன்பு, அதன் கரையில் அயிதையூர் என்றோர் ஊர் இருப்பதும், அது பெருந்தேனருவியாகி மேலைக்கடலை நோக்கி ஒடுங்கால் அதன் கரையில் அயிரூர் என்றோர் ஊரிருப்பதும், பிற்காலத்தே “அயிரூர் சொரூபம்” என்றொரு வேந்தர் குடிக்கிளை இருந்திருப்பதும் மேலே கண்ட முடிபை வற்புறுத்துகின்றன.

பின்பு குட்டுவன், அரசியற் சுற்றத்தாரும் தானைத் தலைவரும் புடைவரத் தன் மனையாளுடன் வஞ்சிமா நகர் வந்து சேர்ந்தான்; இரப்போர் சுற்றமும் புரப்போர் கூட்டமும் அவனைப் பாராட்டி வாழ்த்தின. நெடும்பார தாயனார் அரசன்பால் விடை பெற்றுக் கொண்டு துறவு பூண்டு காடு சென்று சேர்ந்தார். சில ஆண்டுகட்குப் பின்பு, ஒருகால், பாலைக்கோதமனார், “வேந்தே, எவ்வுயிர்க்கும் தீங்கு கருதாக் கொள்கை யாலும், சீர் சான்ற வாய்மையுரையாலும், சொல்லும் பொருளும் சோதிடமும் வேதமும் ஆகமுமாகிய இவற்றால் எய்திய புலமையாலும், முனிவர் துணையாதல் வேண்டி எடுத்த வேள்வித் தீயிடை எழுந்த


  1. Chera Kings p. 15.