பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் 165



சேர்ந்த ஆலநாட்டுக் கிருதர் (Kurds or kruds) அனுசர் (Anshar) முதலியோருடன் கலந்து கொண்டனர். ஆயினும், அவர்கள் அனைவரையும் கிரேக்க யவனர்கள், கிசியர் (Kissians) என்றும், அவர்கள் நாட்டைக் கிசியா என்றும், அவர்களது தலைநகரைச் சூசா (Susa) என்றும் வழங்கினர்[1]. சூசா என்பது அவர்கள் மொழியில் நான்கு ஊர்கள் என்றும் நான்கு மொழிகள், என்றும் பொருள்படுமாம்.

இறுதியில், இக்கோசர்கள் (கிசியர்), மேலைக் கடற்கரையில் வந்து தங்கிய யவனரோடு உடன் போந்து துளுநாட்டுக் கடற்கரைப் பகுதியில் நிற்கும் மலை நாட்டில் தங்கி வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த நாட்டிற் போல துளு நாட்டிலும் கால் நிலையும் மலைவளமும் பொருந்த இருந்தமையால், உடனே போந்த யவனர்கள் அவரின் நீங்கித் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய போதும், இக்கோசர்கள் திரும்பச் செல்லாமல் துளு நாட்டையே தமக்கு வாழிடமாகக் கொண்டனர். ஆயினும், இயல்பாகவே, அவர்கள், தங்கள் நாட்டில் நாடோடிகளாய் வாழ்ந்ததனால், அதே முறையில் துளுநாட்டில் தங்கிய போதும், தங்கட்கெனத் தனி நாடு ஒன்றை வரைந்து கொள்ளாது, நாட்டு வேந்தர்கட்கு விற்படை மறவராய் வாழ்ந்து வருவாராயினர், கொண்கான நாட்டு வேளிர் தலைவர்களும் பாயல் மலையில் வாழ்ந்த பிட்டன் முதலிய தலைவர்களும் இக் கோசர்களைத் தமக்குப் படை மறவராகக் கொண்டிருந்தனர். நன்னன்


  1. Historian’s History of the World. P. 341.