பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 207



நிகழ்ச்சியைச் செந்தமிழ்க் கோயிலாகிய சிலப்பதிகாரம் அமைத்துச் சிறப்பித்த இளங்கோ அடிகள் பெயரால் “இளங்கோவூர்[1]” என்று ஊரும் சேர நாட்டில் ஏற்படுத்தி னான். அவையிரண்டும் யவன அறிஞரான தாலமயின் குறிப்பில் உள்ளமை ஆராய்ச்சி யறிஞர் கண்டு இன்புறுவாராக[2].


9. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு வேளாவிப் பதுமன் தேவி ஈன்ற மக்கள் இருவருள், முன்னவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் பின்னவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமாவர். இவர் நார்முடிச் சேரலுக்கும் செங்குட்டுவனுக்கும் இளையவனாதலின் செங்குட்டுவற்குப் பின் சேரநாட்டு அரசு கட்டில் ஏறினான்.

ஒருகால், தொண்டை நாட்டுக்கும் கொண்கான நாட்டுக்கும் இடையிலிருந்த தண்டாரணியத்தில் வாழ்ந்த வேந்தருக்கும் சேரருக்கும் பகைமையுண்டாக, இச் சேரலாதன் சேரர் படை யொன்றைக் கொண்டு சென்று வெட்டிசிப் போர் செய்து நிரைகளைக் கவர்ந்து வந்தான், அவற்றைத் தன் நாட்டுத் தொண்டி நகர்க்கண் நிறுத்தி அச் செயலில் துணை புரிந்த வீரர்களுக்கும் ஒற்றர்களுக்கும் கணிமொழிந்த பிறர்க்கும் பகுத்தளித் தான். தண்டாரணியத்திற் கோட்பட்டவற்றுள் வரை யாடுகளே மிக்கிருந்தமையின் அவனுக்கு ஆடுகோட்


  1. Ilankour.
  2. MC. Crindle’s Translation: Ptolemy P. 54.