பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் மாவண்கோ 349



உடற்றின. முடிவில் பாண்டிப் படை கானப் பேரெயிலை வென்று கொண்டது. வேங்கை மார்பன் புறந்தந்து ஓடினான். பின்னர், அவ்வேங்கை மார்பன், இனிக் கானப்பேரெயிலை நாம் பெறுவதென்பது ஆகாத செயல்: “கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புண் நீரினும் மீட்டற் கரிது[1]” என இரங்கிச் செயலர் றொழிந்தான். அப்போது உக்கிரப் பெருவழுதியின் வெற்றியைப் பாராட்டி, ஐயூர் மூலங்கிழார் என்ற சான்றோர் பெருவழுதியை வியந்து, கானப்பேர் எயில் இரும்புண்ட நீரினும் மீட்டற்கரிது என, வேங்கை மார்பன் இரங்க “வென்ற” கொற்ற வேந்தே, இகழுநர் இசையோடு மாய “நின்வேல்” “புகழொடு விளங்கிப் பூக்க” என்று வாழ்த்தினர்.

உக்கிரப் பெருவழுதி கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி என்ற சிறப்புடன் மதுரை நகரை அடைந்து வெற்றிவிழாக் கொண்டாடினான். அவ் விழாவிற்குச் சான்றோர்களும் சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் சேரமான் மாவண்கோவும் வந்திருந்தனர்.

விழா விடிவில் சேர சோழ பாண்டியர் மூவரும் ஒருங்கு வீற்றிருப்பச் சான்றோர் பலர் கூடியிருந்தனர். அச் சான்றோர் கூட்டத்தே ஒளவையாரும் வந்திருந்தார். அவருக்கு முடிவேந்தர் மூவரும் ஒருங்கே கூடியிருந்த காட்சி பேரின்பம் தந்தது. அவரது வளஞ்சென்ற புலமையுள்ளத்தே உயர்ந்த ஒழுக்கத்துப் பார்ப்பார்


  1. புறம். 21.