பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் மாவண்கோ 351


18. சேரமான் குட்டுவன் கோதை

சேர வேந்தர் குடியில் கோதையென்னும் பெயர் கொண்ட கிளையொன்று பண்டை நாளில் இருந்திருக் கிறது. இக் கிளையினர் பெயர் கோதையென்றே முடியும். இவர்கள் பெரும்பாலும் குட்ட நாட்டிலேயே இருந்துள்ளனர். இன்றும் குட்ட நாட்டில் கோதைச் சிறை, கோதைக் குறிச்சி, கோதைச் சேரி, கோதை நல்லூர், கோதைக் குளங்கரை, கோக்கோதை மங்கலம் என ஊர்களும், கோதையாறு என யாறும் உள்ளன. இவ்வாறு கோதை என்ற பெயரோடு கூடிய ஊர்களோ பிறவோ ஏனைக் குடநாட்டிலும் வேணாட்டிலும் இல்லை.

செங்குட்டுவன் காலத்தில் வில்லவன் கோதை என்ற பெயருடைய அமைச்சனொருவன் இருந்தான் என இளங்கோவடிகள் குறிக்கின்றனர்[1]. இக்கோதை குட்டநாட்டுக் கோதை வேந்தரின் குடியின்னாகும் எனக் கருதுவதுண்டு. இக்கோதை வேந்தர், சங்கத் தொகை நூல் காலத்திலும், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள் நாயனார் காலத்திலும் இருந்தனர் என்பது ஒருதலை. இவருள் குட்டுவன் கோதை என்பவன் மிகவும் பழையோனாக வுள்ளான். அவன் காலத்தில் பாண்டி நாட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய பாண்டியன் நன்மாறனும், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், சோழ நாட்டில் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளனும் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்


  1. சிலப். 25: 151.