பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிப்புரை 381



இதனைக் கேட்டதும் அந்தக் காதலன், “ஏன் இவள் இங்ஙனம் இன்று பேசுகிறாள் என நினைக்கின்றான். தோழி இதனைச் சொல்லுதற்கு முன்பு அவள் உரைத்தவை அவன் நினைவுக்கு வருகின்றன. பெருங் கடலுள் கிடக்கின்ற மீன்களை அவ்விடத்தினின்றும் தமது வலையால் நீக்கிக் கரைக்குக் கொணர்ந்து இரப்பவர்க்கும் தம் இனத்தவர்க்கும் வழங்கி, மீனாகிய உயிர்களை வருந்தினோமே என்ற உணர்ச்சியின்றி மீன் வேட்டுவர் மணற்குன்றிலே உறங்கும் துறைவனே என்ற கருத்துப்பட,

“நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலைக்
கடல்பாடு அழிய இனமீன் முகந்து
துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி...
பெருங்களம் தொகுந்த உழவர் போல
இரந்தோர் வறுங்கலம் நிறைய வீசிப்
பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக்
கோடுயர் திணிமணல் துஞ்சும் துறைவ,
பெருமை என்பது கெடுமோ?”

என்றான். இதனை நினைத்தபோது, பெருங்குடியிற் பிறந்திருக்கின்ற இவளை நின் காதல் வலையால் நின் வயமாக நீக்கிக், கடிமணம் புரிந்து கொள்ளக் காலம் தாழ்த்து வருத்தி இவள் மேனி வேறுபடுவது கண்டு பிறரெல்லாம் பலப்பல குழும்படி அலராக்கிவிட்டுத் துயரமின்றி நின் மலையின்கண் நீ உறங்குகின்றாயே என்ற கருத்து உள்ஸ்ரீத்தப்பட்டது தெரிகிறது. பின்னர் அவன் அவளை விரைவில் வரைந்து கொள்கிறான்.