பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரநாட்டின் தொன்மை 53



பதினெட்டுச் சிறு நாடுகளாக வகுத்து ஆட்சி செய்தான். மெக்காவுக்குப் போன போது கோயிக்கோட்டு வேந்தனான சாமொரின் பால் தன் உடைவாளைத் தந்து விட்டுப் போனானென்றும், அங்கே (மெக்காவில்) அவன் இறத்தற்கு முன் அரபியர் தலைவனொருவனை மலையாள நாட்டுக்கு அனுப்பினானென்றும் அவன் வந்து மலையாள நாட்டில் இசுலாம் சமயத்தைப் பரப்பினானென்றும் கேரளோற்பத்தி கிளந்துரைக்கின்றது.

மெக்கா நாட்டில் கடல் வாணிகம் செய்து பெருஞ்செல்வம் ஈட்டிய ஒருவன், கோயிக்கோட்டில் தங்கினான் என்றும், பின்பு புண்டோகோன் என்பான் காலத்தில் வெளிநாட்டிலிருந்து கோயமானொருவன் போந்து சாமொரினுக்குப் பெருந்துணை செய்தா னென்றும் அவன் பெயரால் அந் நகர் கோயிக்கோடு என்று பெயரெய்துவதாயிற்றென்றும் அதே நூல் கூறுகிறது.

இந்த நாட்டுக்குக் கேரளம் என்ற பெயர் வந்ததற்குக் காரணம் கூறப் புகுந்த இந்தக் கேரளோற்பத்தி, மலையாள நாட்டு வேதியர்கள் ஒருகால் சோழ மண்டலம் சென்று தங்கட்கொரு வேந்தன் வேண்டு மென ஒருவனை வேந்தனாகக் கொணர்ந்தன ரென்றும், அவனுக்குக் கேரளன் என்ற பெயரென்றும், அவன் தனது ஆட்சியைச் செவ்வே நடத்திவிட்டுச் சென்ற தனால் அவனது நினைவுக் குறியாக மலையாள நாடு கேரள நாடு என்று பெயரெய்திற்ரென்றும் பொய் புனைந்து கூறுகிறது. கேரள மான்மியம் என்னும்