பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 சேர மன்னர் வரலாறு



கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பெட்ரோனியு (Petronius) என்பவர், அந் நாளைய யவனச் செல்வ மகளிரின் பெருமித வாழ்வைக் கடிந்து நூலொன்றை எழுதியிருக்கிறார். அதன்கண் நம் தமிழ் நாட்டிலிருந்து யவனர்கள் கொண்டுசென்ற மெல்லிய ஆடையை உடுக்குமாற்றால் யவன மகளிர் தங்கள் உடல் முற்றும் புறத்தே தெரியுமாறு காட்டிப் பொலிவிழக் கின்றனர் என்றும், அவ்வாடைகள் காற்றலாகியவை, முகிலால் ஆகியவை, ஆவியால் ஆகியவை என்றும் குறித்திருக்கின்றார். “புகைமுகந் தன்ன மாசில் தூவுடை” என்றும், “ஆவியந் துகில்” என்றும் வரும் சங்கநூல் கூற்றுகள் அவர் கூறுவனவற்றை வற்புறுத்துகின்றன.

எகிப்து நாட்டு ஓ செலிசு துறையினின்று (Ocelis) புறப்படும் காலம் தென்மேற்குப் பருவக் காற்றைத் துணைக்கொண்டு நாற்பது நாள்களில் முசிறித் துறையை அடையும்; அத் துறையில் கடற்கொள்ளைக் கூட்டத் தினர் உளர்; அவர்கள் நித்திரியாசு (Nitrias) என்ற இடத்தில் உறைபவர். முசிறித் துறை வணிகப்பொருள் மிகுதியாக உடையதன்று; கலம் நிற்கும் இடத்துக்கும் முசிறித் துறைக்கும் நெடுந்தூரம் இருக்கிறது. ஏற்றற்குரிய பொருளைச் சிறு சிறு படகுகளில் கொணர வேண்டும். இப் பகுதிக்குரிய வேந்தன் கேளோபோத்திராசு (Caelobothras) இம் முசிறித் துறையினும், நியாசிந்தி (Neacyndi) நாட்டிலுள்ள பாரேசு (Barace) துறை சிறந்து விளங்குகிறது. அதற்குரிய வேந்தனான பாண்டியோன் (Pandion), உள்நாட்டில் மதுரையென்னும் நகர்க்கண்