பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 சேர மன்னர் வரலாறு



இத் தொடரைக் குடவரையெனவும், சேர நாட்டவரைக் குடவர் எனவும் பொதுவாகக் கூறுவது தமிழ்நாட்டார் வழக்கம். முதல் இராசராசனுடைய கல்வெட்டுகள் சேர நாட்டைக் குடமலை நாடு[1] எனக் கூறுவது காணலாம், சேக்கிழாரடிகள், “மாவீற்றிருந்த பெருஞ் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாடு” என்று, சேர மன்னர்களைப் “பாவீற்றிருந்த பல்புகழார்[2]” என்றும் பாராட்டிக் கூறுவர்.

இச் சேர மன்னர் மலைநாட்டில் வாழ்ந்தமையின் மலைகளிலும் மலைச்சரிவுகளிலும் மண்டியிருந்த பெருங் காடுகளில் வேட்டம் புரிவதையே தொடக் கத்தில் மேற்கொண்டிருந்தனர்; அதனால் இவர் களுடைய கொடியில் வில்லே பொறிக்கப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் பனை மரங்கள் காடுபோல் செறிந்திருந்தன; அதனால், அவர்கள் தமக்கு அடை யாள மாலையாகப் பனந்தோட்டால் மாலை தொடுத்து அணிந்து கொண்டனர். இன்றும் சேர நாட்டு வடபகுதிக் கடற்கரையில் பனைகள் மல்கியிருப்பது கண்கூடு. தொல்காப்பியனாரும் இச் சேரரது பனந்தோட்டு மாலையை அவர்கட்குச் சிறப்பாக எடுத்தோதுவர்.[3]

இச் சேர நாடு மேலைக் கடலைச் சார்ந்து கிடத்தலின்’ சேரர்கள் கடலிற் கலஞ் செலுத்துதலிலும் சிறந்திருந்தனர். கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே மேலையுலகத்து சால்டியா


  1. பிற்காலச் சோழர்** பக், 103,
  2. திருத்தொண் கழறிற் 1. *
  3. தொல். பொ. 60*