பக்கம்:சேரர் தாயமுறை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயமுறை. {10) 4, 6, 8 பக்கங்களில் தேவி என்னும் முறைப் பொதுப் பெயர் மட்டும் நின்று, அம் முறையுடையாளான பதுமன் தேவியின் இயற்பெயர் ஈட்டப்பெறாமலிருக்கிறது. 2, 9 பதிகங்களிலோ வேண் மாள் என்ற முறைப்பெயரோடு 'நல்லினி' 'அந்துவஞ்செள்ளை' எனும் இயற்பெயர்கள் தொடர்ந்து 'வெளியன் மனைவி நல்லினி', ' 50% L) யூர் கிழான் மனைவி அந்துவஞ்சென்ளை' எனத் தெளிக்கப்படுகின்றது. இங்கு இவர்கள் இயற்பெயரைத் தனித்தனியேவிளக்குவதால், இருவ ருக்கும் பொதுவான வேண்மாட்சொல் முறைப் பெயரேயாவதனை முன்னரே விளக்கியுள்ளேம், (11) இன்னும், வேண்மான்' என்பதற்குச் சிற்றரசன்' என்றும், வேண்மாள்' என்பதற்குச் சிற்றரசன் மனைவி-முடியுடை யரசன் மனைவி என்றுமே பதிற்றுப்பத்து அரும்பத அகராதியில் பஹா மஹோபாத்தியாய சாமிநாதையரவர்கள் பொருள் குறித்துள்ளார்கள். அதனாலும் இச்சொல் இப்பதிகங்களில் சிற்றரசரான வெளியன் மையூர்கிழான் என்ற வேளிர்களின் மனைவிமாரையே சுட்டுகின்ற தென்று துணியலாகும். (12) இவை பலவற்றாலும், இப்பதிகங்களில்வரும் வேண்மாட் சொல் மனைவிப் பொருளையே குறிக்குமென்பது விசதமாகும். ஆகவே, இரண்டாம்பதிகத்தால் வேள் வெளியலுக்கு நல்லினி' மனைவி யென விளங்குகிறது. இனி இப்பதிகத்திலேயே இமையவாம்பன். நெடுஞ்சேரலாதன் வேள் - வெளியனுக்கும் அவன் வேண்மாள்-நல்லி னிக்கும் மகனென்று சொல்லப்படுதலால், அவன் உதியஞ் சேர லாதற்கு மகனாமாறில்லை, மருகனேயாவனெனத் தெளிகின்றேம். அதுவே போல், 9-ஆம் பதிகத்தாலும் இளஞ்சேரலிரும்பொறை வேள் - மையூர்கிழானுக்கும் அவன் தேவி அந்துவஞ்செள்ளைக்கும் மைர்தனாய், குட்டுவன் இரும்பொறைக்கு மருகனேயாவனென அறிகின்றோம் "குட்டுவான் இரும்பொறை-குடக்கோ இளஞ்சேர இரும்பொதையின் மாமன்" என்று மஹாம ஹோ பாத்தியாய பிரும்மஸ்ரீ உ. வே. சாமிகாதையாவர்கள் பதிற்றுப்பத்தின் அரும்பர 'முதலியவற்றின் அகராதியிற் காட்டியிருப்பதும் இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/40&oldid=1444780" இலிருந்து மீள்விக்கப்பட்டது