பக்கம்:சேரர் தாயமுறை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாமன்றி இளஞ்சேரலிரும்பொறை யீறா நான்காசர் வரன் முறையாய் ஆட்சி புரிந்தனரெனவும் விளங்குகிந்து. இவற்றைக்கொண்டு இமையவரம்பு னுக்குப் பதுமன் மகளும் சோழன் மகளும் மனைவியராய் மக்கள்மூவ ரைப் பெற்றுக்கொடுத்தனரெனவும், அம்மக்கள் தம் தந்தை சிறிய தந்தை இருவரும் ஆண்டபிறகு முறையே தாம் முடிபுளைத்து தனித் தனியே எல்லாரும் சேரநாட்டை ஆண்..னரெனவும், அதுவே போல அந்துவஞ் சோலுக்குக் கடுங்கோவும், அவனுக்குப் பெருஞ் சேரலிரும் பொறையும், அவனுக்கு இளஞ்சேரலிரும்பொடையும் வழிமுறையே மகன்மகனாய்க் கிளைச்சோர் சிறுநாட்டை ஆண்டுவந்தனரெனவும் ஒருசிலர் கருதுகின் றனர். ஆனால், ஆழ்ந்து சூழ்ந்து நோக்குங்கால் உண்மை வேறாகக் தோன்றுகிறது. இமையவரம்பனும் அவன் கம்பியும் வேள் வெளிய னுக்கு பாக்கள். இவர் கம் மாமன் . தியஞ்சேரலுக்கு மருகராய், அவ னுக்குப்பின் சேரநாட்டுரிமைபெற்று, ஒருவர்பின் ஒருவராய் ஆண்ட னர். அவருக்குச் சோதரிமுரையினரான அவர் கோக்குடப் பிறந்த பெண்டிருள் ஒருத்தி வேள்பதுமனையும் மற்றொருத்தி சோழனையு மாசு மணந்து மக்களைப்பொனர். அப்மக்கள் தம் தாயர்குடிச் சோ மன்னருக்கு வழிமுறையில் மருகராதையால், மாமன்மாரிருவரும் தத்தம் முறையில் ஆண்டு முடிந்த பின்னர் மருகருரிமையில் வரிசை முறையாய்த் தாமும் சேரசிக்காதனம் ஏறுகின் றனர். பதிமன்தேவி ஒருத்தியே-சோர்பெருங்குடியில் இமையவரம்பலுக்குச் சகோதரி யாயும்-கிளைச்சோர்குடியிற் கடுங்கோவுக்குச் சோதரிமுறையுடைய வாயும் நின்று, தான் பெற்ற மக்களுள் ஒருவனைத் தன்குடியில் மருக னில்லாத கடுங்கோவுக்கு மருகனாய் அவன் கிளைக்குடிதழையக் கொடுத்து தவியிருக்கலாம். அல்லது வேள்பது மறுக்குக் கோக்குடி நெடுஞ்சேரலாதன் சோதரி ஒருமனைவியும், கிளைச்சேரர்குடிக் கடுங் கோவின் சோதரி ஒருமனை வியுமாயிருந்து அவரவர் தாய்க்குடியைத் தாங்க இவ்விருமனைவிமாரும் பதுமனுக்கு மக்களைப் பெற்றுமிருக்க லாம். எப்படியாயினும், இம்மக்கள் ஒவ்வொருவரையும் பதுமன் தேவிமக்கள் எனச் சுட்டுவது தவறாகாது. இவ் கிருகுடியிறும் இவ் வாது மாமன்மார்க்கு மருகர் வழித்தோன்றல்களாய்தின்று, வான் முறையே மாகாண்டனர். இதுவே இப்பதிகத்தொடர்கள் தெரிவிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/56&oldid=1444797" இலிருந்து மீள்விக்கப்பட்டது