பக்கம்:சேரர் தாயமுறை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாயம் தொல்லைத் தமிழ்மாபா பழமாபாமேல், தமிழகத்திற் கோன மொழிந்த பிற பகுதிகளிலெல்லாம் இது வழக்கிழந்தது மட்டுமன்றி, பழஞ்சோருக்கு மக்கட்டாயமே மாபாமெனத் தமிழர் மயங்கும்படி இது மறக்கப்படவும் காரணமென்ன? தமிழயாபன்றேல், சோர் எக்காலத்தில் யாண்டிருந்து எப்படி இதனை மேற்கொள்ளலாயினர்? சோரே தமிழர் தானா? அன்றி (வடவாரியரை வணக்கியது' போலவே, 'தமிழப்படையையெல்லாம் இடையறப்படுத்தி'த், தருக்கினர் என்று இவர் கீர்த்திகொள்வதால், இச்சேரர் தமிழால்லாத அந்நியரா? இவ்விடத்தில் நாம் கருதவேண்டியன இன்னும் சிலவுள. தமி முகத்தில் மேல்புலத்து மட்டுமே இக் தாய்வழித்தாயமுறை நடக் இன்றது. அங்கே, நாயர் முதலிய திராவிடச முதாயத்தார் மட்டு மில்லை; தம்மை நல்ல அசல் ஆரியப்பிராமணராகப் பாராட்டித் தருக்கும் நம்பூரிமாரும், புறமதத்தராய்ப் பிறநாட்டிலிருந்து வந்து குடியேறிய மாப்பிள்ளைமாருமே மருபக்கட்டாயிகளாயிருக்கின்றனர். சமீபகாலத்தில் கீழத்தமிழ்காடுகளிலிருந்து வந்தேறிய சிலரொழிய, நெடுங்காலமாகக் குடமலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டார் எல்லாரும் தொன்றுதொட்டு மருமக்கட்டாயத்தையே கையாண்டுவருகின்றனர். இவ்வாறு மேல்புலத்தில்மட்டும் தாய்வழியும் பிறிதெங்கும் தந்தைவழியுமாயிருப்பதன் சரிதமூலச்செய்திகளைத் தேர்ந்து தெளி தல் தமிழர்கடனாகுமன்றோ ? மிகப்பழங்காலத்தில் தமிழகமுழுவ தும் தாய்வழிமாபே பரவியிருந்து, பிறகு மக்கட்டாய ஆரியர் வக் தேறியபின் கீழத்தமிழ் நாடுகளில் தாய்வழி நெகிழ்ந்தொழிந்து தந்தை வழித்தாயம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். எனினும், இத்தாப மாற்றம் குடமலைத்தொடர்கடந்து மேலைப்புலச் சேரரையிணக்கு மாட்டாமல் கோளத்தில் மட்டும் பழைய தாய்வழி தங்கியதெனலாம்' கோளத்தில் மாப்பிள்ளைமார் என்பார் ஆதியில் அராபிசாட்டின ரென்பது எல்லாருக்கும் ஒப்பமுடிவதொன்றே. சமயத்தாலு மிவர் மகம்மதியர். மகம்மதியர் சமுதாய வழக்கவ னுஷ்டானங்களை எளிதில் மாற்ற இணங்காத பிடிவாதிகளென்பதும், தங்கள் அனுஷ்டானங் களுக்காகத் தமதுயிரைப் பொருட்படுத்தாது கொடுத்தேனும் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/66&oldid=1444810" இலிருந்து மீள்விக்கப்பட்டது