பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 O சேற்றில் மனிதர்கள் சீட் கிடைக்கும்னு குழயடிச்சான். இப்ப எங்கிட்ட சிநேகிதி கிட்டப் போறேன்னு காதுகுத்திட்டு ஒடிட்டா. சாமி. படிக்க வச்ச ரெண்டு நாய்களும் இப்பிடித் துரோகம் பண்ணிடுச்சே?” அவர் கடகடவென்று சிரிக்கிறார். 'நீ ஏண்டா சம்முகம் பிரலாபிக்கிற? இதெல்லாம் உன்னாலும் என்னாலும் தடுத்து நிறுத்த முடியுமா? பள்ளம் கண்ட எடம் தண்ணி பாயிது!” "என்ன சாமி, இப்பிடிச் சொல்றீங்க? சேத்துப் புழுக்களா இருந்தவங்க இன்னிக்கு இந்த அளவுக்கு வர எத்தினி அடியும் மிதியும் பட்டோம்? குடும்பம் எப்படிப் பஞ்சிப் பிசிறுகளாச்சி? இன்னும் ஒரு மூக்கறைப் பிண்டத்தை வச்சிச் சுமை இழுத்திட்டி ருக்கிறோம். இப்ப கண்ணு முழிச்ச இந்த நாய்களுக்கு நன்னி இல்லாம போயிடிச்சே? கோட்டைன்னு நினைச்சி இறுமாப்பு வச்சிட்டிருக்காதேன்னு மூஞ்சிலடிச்சிட்டுப் போனாப்பல." "அட ஏண்டா பொலம்பிச் சாகற? படிச்ச பொண்ணு. உங்காலத்துப் பிரச்னை வேற; இப்ப அதுங்க கண்ணோட்டம் வேற, ஏம் விருதாவா சங்கடப்பட்டுட்டிருக்கே? விட்டுத்தள்ளு!" “எப்படிங்க விட்டுத் தள்ளுவது? எங்க தாய் தகப்பனுக்கு இருந்திராத சவுரியம் எங்களுக்கிருக்கு, எங்களுக்கில்லாத சவுரியம் எங்க மக்களுக்குன்னு அவங்கள கோபுரத்தில ஏத்தி வைக்க ணும்னு பாடுபட்டேன். பையன் கட்டிக்கிட்ட வேட்டிய நா உடுத்துவேன். பொண்ணு. அவள சமீன்வீட்டுப் புள்ள மாதிரி நடத்தினேன்.” அவர் அருகில் வந்து தோளைப் பற்றுகிறார். "என்னடா இவ்வளவு திராபையா இருக்கிற பொண்ணாவது புள்ளயாவது; ஏதோ உன் கடமை, நீ செஞ்சே. அவங்கவங்க கரும பலனை அவங்கவங்க அநுபவிச்சிட்டுப் போறாங்க.." திடுக்கிட்டாற்போல் சம்முகம் குலுங்குகிறார். - "வெந்ததத் தின்னு விதி வந்தாச் சாவோம், நாம சாணிப் புழுக்களப்போல இருக்கத்தான் பிறவி எடுத்தோம்ங்கறது அறியாமை. எழுந்திருங்கடா" என்று ஆவேசப்பிரசங்கம் செய்த விசுவநாதனா இவர்? "என்ன சாமி! நீங்களே இப்ப கருமம் அது இதுன்னு பேசுறீங்க? இன்னும் எங்க குடிகள்ள ஒரு சிலரத்தவுர எல்லாம் சேத்தில உழச்சிட்டு, கள்ளக் குடிச்சிட்டு, பொண்டு