பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 123 "நாங்க காலி பண்ண மாட்டமின்னா சொன்னம்? முதலாளிக்கு உடம்பு சரியில்லாம ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்கு. இப்ப நடவு ஒழவுன்னு போனாதா எங்களுக்கு ரெண்டுகாசு கிடக்கிம்னு நாயமாச் சொன்னோம். நீங்க இப்படி நெருபிடியாப் பிரிக்க வச்சிட்டீங்க." "ஆமா, அப்படிச் சொல்லலன்னா நீங்க பிரிப்பீங்களா? அல்லாருமாச் சேந்து கொடியத் துக்கிட்டுப் போராட்டம் கிளம்புவீங்க? எலே, நீங்க என்னிக்கு நாயமா நடந்தீங்க? வெட்டுறதும் குத்துறதும் அள்ளுறதும் துள்ளுறதுமா ஊரையே நாசம் பண்ணிப்போடுறீங்க. உங்களுக்கே நாயமில்ல, இங்க நாயம் கேக்க வரீங்க. போங்கடா..” இதைக் கேட்டதும் வடிவு திமிருகிறான். "எல, சும்மாருடா. அவங்க கை இப்ப மேலுக்கு இருக்கு இப்ப எதும் கோபத்தில செஞ்சிட்டா, இவனுவளே நாலு வக்கப் படப்பக் கொளுத்திட்டு நம்ம செயில்ல கொண்டு வைப்பான். இப்ப நாம ராவிக்கு முதலாளி வூட்டில போயி ஒண்டிட்டுப் பொழுது விடிஞ்சி எதானும் பண்ணுவம்." அமாவாசியின் மனைவி கர்ப்பிணி, மற்றவர்கள் காலையி லேயே இந்த நெருக்கடி வந்ததும் கூட்டைப் பிரித்துக்கொண்டு ஆற்றுக்கு அக்கரையில் சேர்த்துவிட்டார்கள். குப்பன் உழவுக்குப் போய்விட்டுப் பிற்பகலில்தான் திரும்பியிருந்தான். பஞ்சமியைக் கண்டபடி ஏசினானாம். சீலையைப் பிடித்து இழுத்தானாம் ரங்கன் பயல். வடிவு உண்மையாகவே அவர்கள் கொல்லைகளை நாசமாக்கிவிடத் துடிக்கிறான். சம்முகம் இருந்திருந்தால் ஒரு படைதிரட்டி விடுவான் என்றே இவர்கள் அவர் இல்லாத நேரத்தில் இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறார்கள். "எல்லாம் மொதலாளி வீட்டுப் பக்கம் போயிருங்க, காலம பேசிக்கலாம்.” - பழனி சோற்றுக்கான பசியுடன் அப்போதுதான் ஒடி வருகிறான். அவன் தலையிலும் சுமையை வைத்து அனுப்புகிறான் குப்பன். வாசற்படியில் கிழவி குந்தி இருக்கிறாள். வீட்டினுள் சிம்னி விளக்கு எரிவதுகூடத் தெரியாமல் மங்கலாக இருக்கிறது.