பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சேற்றில் மனிதர்கள் அன்றிரவு அந்தச் சேரி முழுவதும் போலீசு புகுந்து வேட்டையாடி இருந்தது. லட்சுமியின் உடல் முழுவதும் அலங்கோலங்கள். ஒருநாள் ஒரு பகல் சென்ற பின்னரே, அவன் செய்தி அறிந்து பதுங்கி வந்து பார்த்தான். விம்மி வெடிக்க அழுத அவளை முதலாவதாகத் தீண்டி அனைத்து ஆறுதல் கூறியது அப்போதுதான். - மறைந்தும் மறையாமலும் சாடையாகவும் சைகையாகவும் நெஞ்சங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தவர்கள் அந்தக் குதறப்பட்ட வேளையில்தான் பகிரங்கமாக ஒருவருக்கொருவர் என்று தாங்கி நின்றனர். இதைத் தொடர்ந்து சம்முகம் போலீசின் கண்களில் மண் துவ, ஒடி ஒளிய வேண்டியதாயிற்று. சுந்தரமூர்த்தியின் மைத்துனரின் வீட்டில் கடலூரில் சென்று தோட்ட வேலைக் காரனாக இருந்தான். ஆறு மாசம் கழித்து நாகப்பட்டணம் கோர்ட்டில் அவர் சொன்னபடியே ஆஜராகி, பின்னர் அவர் முயற்சியிலேயே ஜாமீனில் வெளியே வந்தான். ஊரே சூனியமாகி இருந்தது. லட்சுமியின் அப்பன் இறந்துபோயிருந்தார். அம்மாளுடன் மாமன் ஊரான பாங்கலுக்குச் சென்றதாகச் சொன்னார்கள். அப்போதெல்லாம், இப்படிப் பஸ்ஸா இருந்தது? நடை. எங்கேனும் ஒளிந்துபோக வண்டி கிடைத்தால் உண்டு. ஒரு முன்னிரவில் அவன் சென்று கதவைத் தட்டினான். குளிர்காலம். திண்ணையில் யாரோ பெரியவர் படுத்திருந்தார். "ஆரது?” * "நாந்தா கிளியந்துற.” குரல் சட்டென்று காட்டிக்கொடுத்துவிட்டது. 'லட்சுமி...!" விளக்கை எடுத்து வந்து அவன்முன் காட்டினாள் தாய். "நீ. உசிரோடு இருக்கியா தம்பி?. சாமி முனிஸ்வரனே?." என்று கரைந்தாள். லட்சுமி. லட்சுமி. அந்த விளக்கொளியில் சிலைபோல் நின்றிருந்த கோலம் அவனுக்கு மறக்கேவேயில்லை. நெற்றியில் குங்குமமும்-திருநீறும், விம்மிய மார்பும் முன் தள்ளிய வயிறும், செம்மை வெளுத்த நிறமும்.ஷ். குப்பென்று ஒர் உஷ்ணம் பாய்ந்து உலுக்கினாற்போல்