பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சேற்றில் மனிதர்கள் கொண்டாள். அந்தச் சமயத்தில்தான் கிழவி இவனைப் புதுக்குடி ஆஸ்பத்திரியில் கொண்டு காட்டினாள். குணமாகச் சிகிச்சை சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இப்போது சில நாட்களாக, இந்தப் பயல் போலீசுக் காரனின் அசுரவித்தா, அல்லது. சிறைக்குச் சென்று மஞ்சட் காமாலை நோய் வந்து செத்தானே, அந்தத் தலைவனா என்று சந்தேகம் வந்திருக்கிறது. இவள் ஏன் கருவைக் கலைக்கவில்லை என்று தோன்றுகிறது. இவள் ஏன் அந்தப் பயலைச் சோறுட்டிப் பாதுகாக்கிறாள் என்று எரிச்சல் வருகிறது. சோறு தின்பதற்கும் குளிப்பதற்கும் சில நாட்கள், ஊரைக் கூட்டுகிறான். காந்தியிடம் அவனுக்குப் பயம் உண்டு. காந்தி சென்ற பிறகு, இங்கே எல்லாம் குலைந்துபோயிற்று. லட்சுமி விரும்பி துரோகம் செய்திருக்கிறாளா?. இந்த எரிச்சலைத் தாள முடியவில்லை. ஆற்றில் மடமட வென்றிறங்கிக் குளிக்கிறார். உடம்பைத் தேய்த்துத் தேய்த்து ஒடும் நீரில் மூழ்கிக் குளிக்கிறார். அவர் வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் நேர்ந்தும் லட்சுமியின் மீது இப்படிச் சந்தேகம் இதுவரையிலும் தோன்றியதில்லை. எண்ணங்கள் முறுக்குப் பிரிந்த வடத்தின் முனைகளாய் எப்படி நினைவுகளை நெருடுகின்றன! கொள்கை வீரர்கள், உயிரைப் புல்லாக நினைத்தவர்கள், மேல்மட்டத்து உயர்மதிப்புக்குரியவர்கள், பலரை அவர் தொண்டன் என்ற முறையில் நெருங்கிப் பழகி அறிந்திருக்கிறார். எவரும் மாமுனிவர் இல்லை. ஐயர், முதலியார், நாயுடு எல்லோரும் மனிதர்களே, பலவீனங்கள் இல்லாத மனிதர் யாருமில்லை. தாழ்ந்த சாதிக் காரன் மட்டுமே நெறிகாக்கும் விஷயத்தில் பலவீனப்பட்டவன் எனவே லட்சுமி. அந்தப் பயல. "மொதலாளி...?” கரையில் வடிவு தோளில் மண்வெட்டியுடன் நிற்கிறான். நீருக்குள்ளிருந்து தலைநீட்டி வாயைக் காறிக் கொப்புளித்த பின் அவனைத் திரும்பிப் பார்க்கிறார். வடிவு தவறை உணர்ந்தாற்போன்று புன்னகை செய்கிறான்.