பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 177 சிரிக்கவில்லை. "ஏன் கோவம்? யாருமேல எப்பிடிக் கோபிச்சுக்கிறதுங்க? மண்ணுல சாணியயுங் கொட்டுறோம். தழயுந்தா அழுவப் போடுறம். அதுலியே நின்னுட்டு எச்சியும் துப்பிட்டுத்தா நாத்து நடுறம் சேத்துல பொறக்கிறவங்க என்னாத்தக் கோவப்படுறதுங்க, சொல்லுங்க?" சம்முகம் சிலையாகிப்போகிறார். பஞ்சமி. அவருக்குத் தெரிந்து இடுப்பில் துணியைச் சுற்றிக்கொண்டு பெயருக்கு மாறாப்புப் போட்டுக்கொண்டு நாற்றுநட இறங்கிய சிறுமி. அந்தக் காலத்தில் பெண்கள் நடவுக்கு இறங்கினால் நிமிர முடியாது. ஒரு பெண்ணின் இயல்பான ஆசாபாசங்கள், வேட்கைகள், உந்துதல்கள் எல்லாமே அந்த மண்ணோடுதான். மார்பில் பால்கட்டும். நீர்முட்டிக் காலோடு வழியும். நாவின் வறட்சியை, பசி தாகம் போன்ற வேட்கைகளை மாற்ற வெற்றிலைச் சருகை நிமிர்ந்து வாயில் அடக்க இயலாது. அப்போது. அவருடைய தாய், டேய், யார்ரா. என்று பயங்கர மாக ஒருநாள் கத்தினாளாம். "நான் காளியாயி, நான் காளியாயி டா. போடுங்கடா பூசை!...” என்று வெடித்து வந்ததாம் குரல். மணிகாரன் பயந்து போனானாம். சாமி வந்திடிச்சு தங்கம்மாளுக்கு என்று நடுங்கி, "தாயே, என்ன வேனும் சொல்லு.” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டானாம்! ஆனால் இந்தத் தந்திரத்தை எப்போதும் கையாள முடியுமா? குட்டு வெளிப்பட்டு விட்டால். மண்ணின் புதல்விகள். மண்ணைப்போல் எல்லீரும் பொறுக்கிறார்கள். சோலை வாங்கி வந்தான் போல இருக்கிறது. முறுக்கும் வாழைப்பழமும் வருகின்றன. குழந்தை அவரைப் பார்த்துச் சிரிக்கிறது. அரையில் ஒரு செப்புக்காக சேர்த்து சிவப்புக் கயிறு கட்டியிருக்கிறாள். அகன்ற கண்களில் மை, நெற்றி முழுதும் அப்பிக்கொண்ட மைப்பொட்டு. குழந்தை. பரங்கி பூசணியையே பாக்குறதில்ல. இது மனிதக் குழந்தை. யாரோ சொந்தம் கொண்டாடி யார் வீடுகளிலோ பொன்னும் மணியும் பாலும் நெய்யுமாக வளமை செழிக்க யார் வீட்டுச் சேர்களுக்கோ போய்ச் சேர பசியும் பட்டினியுமாக உதிரம் கொடுத்தார்கள். அப்போது அந்த மண்ணை வெறுத்தார்களா? இன்றும் உச்சவரம்பும் உரிமைச் , சே -12