பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து ஏக்கர் நிலம் 'ஏலே, இங்கே வா இப்படி, அந்தக் கடுகடுத்த குரல் காதில் விழுந்ததுமே, சங்கரன் நடுநடுங்கிப் போனான். அப்பாவுக்குத் தெரியாமல், இருவோடு இருளாய் நழுவி மாடிக்குப் போய்விட வேண்டுமென்று தான் அவன் கூடத்து விளக்கைக்கூடப் போடாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்றான்; ஆனால் அந்தக் கழுகுக் கண்கள் அவளைக் கொத்திப் பிடித்துவிட்டன. அப்போது ம ணி பதினொன்றுக்குக் குறைவிராது என்று அவனுக்கு நிச்சயமாய்த் தெரியும். இருந்தாலும் அன்று அப்பாவின் குரலில், வழக்கத்துக்கு மீறிய கனமும் அழுத் தமும் தொனித்த தால் 'என்னமோ ஏதோ' என்று சங்கரன் உள்ளுக்குள் குறுகத்தான் செய்தான். இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தே?” அவரது குரலில் குறைவு என்பதே இல்லை; வெறும் வறட்டுக் கடுகடுப்பு. சங்கரன் பதில் சொல்லத் தயங்கிஞான். 'சொல்லேம்லே! வாயிலே என்ன கொழுக்கட்டையார் வச்சிருக்கே ? எங்கேயும் போகலே. பெரிய கோயிலுக்குச் சாமி கும்பிடப் போயிருந்தேன்."