பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து ஏக்கர் நிலம் : 155 இைைர ஒரு அபூர்வப் பிரகிருதி என்றும் சொல்லிவிட முடி யாது. இங்கர்லாலின் பகுத்தறிவுக் கட்டுரைகளில் ஒரு மனப் பட்டு ஈடுபாட்டோடு பேசுவர்கள், கைவல்லிய நவநீதத் தையும், சிவஞான போதத்தையும் அந்தரங்க சுத்தியோடு பாராயணம் செய்வார்கள். இந்தரகப் பேர்வழிகளுக்கு தமது நாட்டில் பஞ்சமே இல்லை. எனவே அருணாசலம் பிள்ளை ஆயிரத்தில் ஒருவர். அவ்வளவுதான். பிள்ளையவர்களின் குலத்தை விளக்க வந்த கருவேப்பிலைக் கொழுந்துதான் செல்வச் சிரஞ்சீவி சங்கரன் கங்கரன் அப் போது ஹைஸ்கூலில் உச்சாணிக் கிளையில் படித்துக்கொண்டி ருந்தான். அவனுக்கு வயசு பதினாறு அல்லது பதினேழு இருக் கும். அந்த வயசே ஒரு தினுசு. வாலிப வயதில் மனித உள்ளம் லட்சியக் காதலிலேயோ, காதல் லட்சியத்திலேயோ. மூழ்கு. வது வழக்கம். துடியான இளம் பருவம் அவன் உள்ளத்தில் தாய். நாட்டின் சுதந்திர லட்சியத்தில் நாட்டம் கொள்ளும் படி தூண்டியது. கலாசாலை மேடையிலே அவனுக்கு நன்றாகப் பேசிப் பழக்கம். மேலும், தேசம் முழுவதும் 1.ரவியிருந்த தேசியப் பற்று அவனையும் ஆட்கொண்டது, காந்தி, காங்கிரஸ், பூரண சுதந்திரம், நமதே ராஜ்யம், ஏகாதிபத் தியம் ஒழிக, முடிசூடா மன்னருக்கு ஜே~-இப்படிப் பலவாறx வார்த்தைகளும் ஜய கோஷங்களும் அவன் நாவில் அடிபட்ட லாயின. எனவே அவன் ஒரு மாணவர் சங்கம் அமைத்து, அதில் தீவிரமாய்ப் பங்கெடுத்து உழைத்து வந்தான், அந்தப் பங்கெடுப்பின் பலனாகத்தான் அருணாசலம் பிள்ளையிடம் அவன் வசவு வாங்கிக் கட்டிக் கொண்டான். ' அருணாசலம் பிள்ளைக்குத் தம் மகனின் செய்கை கொங்கு சமும் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்&n, 'இர னியலுக்கு பிரகலாதன் வந்து வாய்த்த மாதிரி, எனக்கு இவன் வந்து பிறந்தானே', என்று மனத்தில் கறுவிக் கொண்டார், மாட்சிமை தங்கிய வெள்ளைத் தோலை எதிர்த்துப் போராடு வதைப்பற்றி அவருக்கு அவ்வளவு கவலை இல்லை. ஆனால் <<அதிகார பீடத்தில் இருப்பவர்களை இந்த வாண்டுப் பயல்