பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் கதை! இருந்தாலும், கையைப் பிடிக்க வருபவன் அழகை மட்டும் தானா கவனிக்கிறான்? கழுத்து நிறைந்த நகைகள் கிடந்தால் மந்திப் பிறவிகளைக்கூட, மகாலஷ்மிகளாக மதிக்கும் இன்றைய உலகில் அவள் உடம்பில் 'அஞ்சு களஞ்சித் தங்கமாவது வேண்டாமா? - இந்த உலகமே ஒரு தினுசானது. பணம் படைத்த வர்கள் வீட்டுப் பெண்கள். வருஷக் கணக்காய் வீட்டுக்குள் அடங்கியிருந்தாலும், அக்கம்பக்கத்தார் கொஞ்சங்கூட வராயசைக்க மாட்டார்கள், ஆனால் இல்லாதவன் 'வீட்டுப் பெண், எளியவர் வீட்டுப் பெண்ணுக்குச் சீக்கிரத்தில் கல்யாணமாகாவிட்டால், உளரில் நாலு தினுசாகிப் பேச் சுக்களில் ஒரு தினுசுப் பேச்சாவது மீனாட்சியின் பெற்றோர் களின் காதில் விழாகலா போகும்? விழத்தான் செய்தது, பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்க வகை யில்லையே என்று அவர்களும் கல்லப்பட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால், மீனாட்சிக்கு இப்போது வேறு கவலை. அது என்ன என்று சொல்வதற்கு முன். உங்களுக்கு இன்னொரு விஷயத்தை முதலில் சொல்லியாக வேண்டும். காதல் காதல் என்று துடிக்கிறீர்களே! அந்தக் காத லால் ' வந்த கல்லை தான் அவளுக்கு. மீனாட்சியின் கவலை யைப் பற்றி , உங்களுக்கென்ன கவலை? காதல் வந்து விட்டதல்லவா? இனிமேல், நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து சுவாரசியமாகப் படிக்கத் தொடங்க வேண்டியதுதானே! சரி, கதையைச் சொல்லுங்கள் என்று நீங்கள் அவசரப் படுவது எனக்குத் தெரியத்தான் செய்கிறது. சொல்லி விடுகிறேன்... இர ண்டு மாதங்களுக்கு முன்னால், பட்டணத்திலிருந்து மீனாட்சி வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். சும்மா இரண்டு மாச லீவைப் போக்க வந்தவன்