பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூண்டுக்கிளி விடும். உள் நெஞ்சம் அந்த ஒரு சொல் அக்கு மட்டும் 6எந்தத் தூக்கத்திலும் காதைத் தீட்டி வைத்துக் கொண் டிருக்கும். மணி ஆறு அடித்தது, ஜெல்லுக்குள்ளே ஒரே பரபரப்பு, 'ஒரு நாள் கழிந்தது' என்றே திருப்தியோடு ஏகதிகள் எழுந் திருந்தனர். நானும் ஒரு மட்டும் கழிந்தது” என்ற தெம் போடு எழுந்து உட்கார்ந்தேன். - ஆட்டுக்கிடையை எண்ணுவதுபோல் வார்டர் எங்களை எண்ணி, நபர் எண்ணிக்கையைச் சரிபார்த்து விட்டுப் போனான். எழுந்தவுடன் மனசில் ஒரு நிம்மதி, 'இன்று மாலை சாப்பாடு கிளப்பில் ; ஜெயிலிலல்ல” என்ற நினைப்பில் ஒரு அர்த்தமற்ற எக்களிப்பும், நாட்டுக்காக நரகவாசம் செய்து புனிதமடைந்ததாக, மீண்டும் தியாகத்துக்குப் புது ' வள்வு , பெற்றதாக, ஒரு பெருமிதமும் கிளர்ந்தது. . . காலைக் கஞ்சி முடிந்ததும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டேன். அந்தத் தலைவரிடமும் சொன்னேன். அவர் தமது கொள்கையை அந்த வேளையிலும் 'இக்சுன்னா” வைத்துப் பேசி, “பழையபடியும் இங்கே வராதே” என்று சொல்லாத குறையாய் உபதேசம் செய்தார். நான் வெறுமன தலையை அசைத்துவிட்டு ஸெல் ஓலுக்குத் திரும்பினேன், ஒரு மணி நேரத்துக்குள் ஹெட் வார்டர் அங்கு வந்து, வாங்க சாமி, ஜெயிலரு கூட்டியாரச் சொன்னாரு” என்று அழைத்தான். கதவைத் திறந்தான். உள்ளே இருந்த படுக்கை, குவளை முதலியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன், வார்டர் கதவை இழுத்தா மூடினான். கதவின் கிரீச்சிட்ட சப்தம் 'போய்விட்டு வா” என்று சம்பிரதாய வக்கணை குறையாமல் சொல்வது போலிருந்தது. -என்ன ? போய்விட்டு வரலா?