பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாய அறிவிப்பு இன்று அவசரமாகத் திருநெல்வேலி செல்லவேண்டி பிருந்தது. சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நானூறு மைல்; ' ரயிலில் சென்றால், அதாவது , எக்ஸ்பிரஸில் சென்றால் , சரியாகப் பதினெட்டு மணி நேரப் பயணம், பதினெட்டு - மனி நேர ரயில் பயணம் என்பது உடம்பைப் படிக்கக் கூடிய விஷயம்தான் என்பதைப் பதினெட்டு மணி நேரம் பயணம் செய்தவர்கள் தான் உணர முடியும். பிரயாணி களின் ஏகோபித்த ஐக்கிய முன்னணியாகத் திரண்டு, புளிச் சிப்பம் போல் அடைந்து கிடக்கும் மூன்றாம் வகுப்பு வண்டியில், பதினெட்டு மணி நேரம் காலைக் கையை 'அசைக்காமல், குறுக்கைச் சாய்க்காமல் செல்லும் பிரயாணக் கஷ்டத்தை வேத காலத்து ரிஷி புங்கவர்களின் ஒற்றைக் கால் தவங்கள் கூட உணர முடியாது. அத்தனை சிரமம். எனவே கொஞ்சம் வழக்கம்போலவே திடுக்கிட்டேன். “பதினெட்டு மணி நேரப் பயணமானால் மூன்றாம் வகுப்பில் போவானேன் ? இரண்டாம் வகுப்பில் போனால் என்ன? என்று செயலுள்ள புண்ணியாத்மாக்களுக்கு வாய் கூசாமல் கேட்கத் தோன்றும். தமிழ்நாட்டில் - எழுத்தாளனாகப் பிறந்துவிட்டால் மூன்றாம் வகுப்புப் பெட்டிக்குப் பதிலாக, 'நாலாம் வகுப்புப் பெட்டி இருந்தால்கூட நல்லது தான். எனவே எப்படியடா போய்ச் சேர்வது என்று சிறிது மலைத்தேன்.