பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாய அறிவிப்பு அப்போ , இதிலேயே போறேன்.” எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆளைப் பார்த்தால் கொஞ்சம் வம்புதும்பு ஆசாமியாகத் தோன்றியது. சரி, இவரை இந்த இடத்தை விட்டுக் காலி செய்வது கஷ்டம்தான் என்று கருதி, * *ஸார், நீங்கள் கொஞ்சம் இப்படித் தள்ளி இருங்கள். நான் வெற்றிலை டோடுகிறவன், எச்சில் துப்பவேணும் என்றேன். தம்மை இறங்கிப் போகச் சொல் லாதவரை நல்லது தான் என்று கருதி யவர்போல அவர் விலகி அமர்ந்துகொண்டார், நான் நிம்மதி யாக அந்த இடத்தில் அமர்ந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்தேன்.

    • பேப்பர், பேப்பர்

சத்தம் கேட்டதும் நான் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி ஒரு பத்திரிகை) வாங்கினேன். பத்திரிகை படிப்பதைப் பொறுத்தவரை நாகரிகமக்கள் அனைவரும் நான் : உட்டட-- யாவரும் = க பக்ஷனரிகளான கால்நடை ஜாதிதான் என்பது என் அபிப்பிராயம், அவசர அவசரமாகப் புல்லைத் தின்று விட்டு, பின்னால் சாவதானமாக எப்படி மாடு அசை போடு கிறதோ, அது போலவே பத்திரிகையை வாங்கியவுடன் முதலிலிருந்து கடைசிவரை தலைப்புக்களை அவசர அவசர மாகப் பார்த்து விட்டுப் பின்னால் சாவதானமாகப் படிக்க முனைவதுதான் நாகரிக யுகத்தின் நடைமுறை தர்மம், கொரியாவில் அமெரிக்கர் தோல்வி.--வனமகோத்சல் வைபவம் பட்டினியினால் குழந்தையை விற்றள். நவீன நல்லதங்காள்!-~~" ஆத்43 அபிவிருத்தியே உண்மை விடுதலை” மந்திரி பிரசங்கம்--சட்டசபை தமாஷ்ருஷ்யாவில் அணுக் குண்டு ?,.. ' ' . . அட, சரிதாம்ப்பா . நிறுத்துன்னா?” நான் பத்திரிகையிலிருந்து கண்ணை உள்ளே திருப் பினேன்.