பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாய அறிவிப்பு வெளியில் ஒரே இருட்டு, வானத்தில் பொட்டுப் பொட்டாக நட்சத்திரங்கள். தூரத்தில் கீழ்த்திசை அடி வானத்தில் வட்ட நிலா மேலேற முனைந்து நின்றது. ரே செக்கர் வெள்ளம். பச்சை மரங்களின் கரிய பின்ன காலியில் நிலவைப் பார்க்கவே கோலாகலமாயிருந்தது. அந்தக் கோலாகலத்தை நன்றாக நின்று பார்த்துத்தான் அனுபவிக்க வேண்டும்; முப்பது மைல் வேகத்திலோடும் ரயிலில் இருந்து கொண்டு அனுபவிக்க முடியாது. இதைப் பார்த்தவுடன் எனக்கு அபாய அ ரிவிட்டைட் பற்றி ஞாபகம் வந்தது. யாரோ ஒரு எழுத்தாளன் சார்ன் சாப்ளினுடன் பிரமானம் செய்தபோது, இந்த மாதம் காட்சியைக் கண்டு ரசித்தானாம். இதை நின்று பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று பரிதபித்தாளும். உடனே சாப்ளின் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி நன்றாக அணு எளியும்' என்று சொல்லி அபராதத் தொகையைக் கட்டினாராம். ஆனால், இப்படி .. அகாரணம் ரய் உபயோகித்து நான் அபராதம் கட்டத் தயாராகவும் இல்லை, ரயிலில் செல்லும் அத்தனை பேரையும் முட்டாளாக்கும் யோசனையும் எனக்குக் கிடையாது. எனவே கண்ணை மூடிக்கொண்டு கோவையற்ற சிந்தனைகளோடு மனசைத் திரியவிட்டேன். வண்டி தாம்பரத்தில் நின்றது. வண்டி நின்றதுதான் தாமதம். ஒரு ஆசாமி மிகவும் அவசர அவசரமாக எங்கள் வண்டியில் ஏறினார். உடனே என் பக்கத்திலிருந்த ஆசாமி விடுவிடென்று எழுந்து சென்று, " இறங்குமய்யா, இது நிஸர்வ் வண்டி” என்றார். 'அது எனக்குத் தெரியும். வழியை விடு என்றார் அவர். - சொன்னாத் தெரியலே?"