பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78, சேற்றில் மலர்ந்த செந்தாமரை அவள் நடந்தாள்... அந்த அனுபவங்கள்- அந்த அரிசிக் கடையில் ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் விழுந்தடித்துக்கொண்டு. கடை மீது சாடுவார்கள். சக்யத்திலே வாங்குகிற அரிசி கொட்டிப்போகும்; சமயங் அனில்) கையிலுள்ள காசே பிடி தவறி, சாக்கடையில் விழுந்து விடும்; சில சமயம் ஆட்களே விழுந்து விடுவார்கள். அன்றொரு நாள் கூட்டத் தில் இவளுடைய சேலை அகப்பட்டுக் கொண்டு தோளில் கிடந்த மூன்தானை விலகி, தன் கட்டமைந்த மார்க்.ம், உடம்பும் வெட்ட வெளிச்சமானதும், அதைக் கூர்மையுடன் பார்த்த அந்தப் போலீஸ்காரன் தன்னைப் பார்த்துச் சிரித்துக் ,.* கண்ணடித்ததும், கடைக்காரன் அரிசியைக் கூடையிலே கொட்டும்பொழுது வேண்டுமென்றே இவள் மார்பில் இடித்ததும், காசு வாங்கும்போது கையைச் சுரண்டியதும்... அவளுக்கு அதையெல்லாம் எண்ணினால் வெட்கம் உடம்பைப் பிய்த்துப் பிடுங்கும்." அவள் விரைவாக நடந்தாள்; நடந்தாள்.......... ஆனால் அந்தக் கடையைச் சேர்ந்தவுடன் தான் அவளுக்கு விஷயம் புரிந்தது. கடை முன்னால் சிந்திக்கிடந்த அரிசி மணிகளோ ஒரு புழுக்கூட்டம் கொத்திப் பொறுக்கிக் கொண் - டிருந்தது. ஒன்றிரண்டு சோமாறிப் பையன்கள் கடை முன்னுள்ள சாக்கடைச் சகதியை '" அள்ளி அள்ளி ஏதேனும் காசு கிடைக்காதா என்று துழாவிக் கொண் டிருந்தார்கள். அரிசி விநியோகம் - முடிந்து கடை சாத்தியாய் ககள் ஒரு புழுக்க, முன்னால் சிந்தித்து அவளுக்கு அன்று லஃமிக்கு அரிசி கிடையாது; அவள் தாய்க்கு இஞ்சி-அதுவும் கிடையாது: லஷ்மிக்குக் '. கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.