பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை கீழே விழுந்து எழுந்திருந்த ராமசாமி 8: அடேயப்பா! பெரிய பத்தினித் தங்கத்தான் குடுத்து வைக்காதவ. இவ இல்லாட்டா, ஊரிலே பொம்பளைகளே இல்லாமலா போராட?! மாடத் தெருவுக்குப் போனா... என்று முனகிக் கொண்டே அரும்பு மீசையை விரலால் கீறிக் காட்டிலுள். 'எல்' » பன் கோ 'பிகோன்” இறங்கிட்டுதே! என்று சலித்துக் கொண்டான் பக்கத்திலிருந்த தோழன். ""சரி!, வா, சாலைக்கரையான் கடைக்கு!" என்று மூலாகி விட்டு, அவன் தோளில் கையைப் போட்டான் ராசோம். --- ஐந்து வருஷங்கள்! திருவனந்தபுரம் சாக்ஸ்பிரசில் தென் திசை நோக்கி வந்துகொண்டிருந்த ராமசாமி தனது கடந்த ஐந்து வருஷ கால ராணுல் சேவையை எண்ணிப் பார்த்தான்... பர்மாவில் ஜப்பானியரின் குண்டு மழைக்கிடையில் (போராடிய 'பதினாலாம் சேனையில் தான் செய்த சேவை; அக்யாப் போர்முனையில் பதினாறு மைல் தூரக் காட்டுப் பாதையில், தோளில் பெரிய மூட்டைகளைச் சுமந்து இரவோடு இரவாய் நடந்து சென்ற ரூட் மார்ச்; ஸெண்ட்ரி ட்யூடி.யில் பாம்புகள் நடமாடும் வனப் பிராந்தியத்தில் குளிரும் கொகவும் வாதைப்படுத்த, இரவு முழுவதும் பாராக் கொடுத்த வைபவம்; இடையிலே ராணுவ ஆஸ்பத்திரியில் காய்ச்சலாய்க் கிடந்ததும், அப்போது அங்குள்ள நர்ஸ் ஒருத்தியைக் கையைப் பிடித்திழுத்ததும்; அதன் விளைவாகக் கிடைத்த இருபத்தொரு நாள் சிறைவாசம்; சிங்கப்பூரிலே கையிலிருந்த கடிகாரத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிக் குடித்தது; ஆக்கின் வெக்